மானிப்பாய் மருதடி விநாயகர் திருக்கோயில், இலங்கை | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மானிப்பாய் மருதடி விநாயகர் திருக்கோயில், இலங்கை

ஜூலை 19,2009  IST

Comments

தலவரலாறு : இலங்கையில் உள்ள விநாயகர் திருக்கோவில்களில் முதன்மைத் தலமாக விளங்குவது மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம் ஆகும் . தமிழ் வேந்தர் காலத்துத் திருத்தலங்களிலொன்றாகப் போற்றப்படும் இத்தலம் பற்றிய பல்வேறு ஐதீக வரலாறுகள் கூறப்படுகின்றது. அருட்சிறப்பும் அற்புதமும் நிறைந்த மருதடி விநாயகர் ஆலயம் தனியாரின் பராமரிப்பில் பராமரிக்கப்பட்டு, சென்ற நூற்றாண்டில் பொதுக்கோவிலாகப் பிரகடனம் செய்யப்பட்டு பொதுமக்களால் தற்போது நிர்வகிக்கப்பட்டு வருகிறது. காலம் தவறாத பூஜை,வழிபாட்டு ஒழுங்கு, திருப்பணி வேலைகள், அறநெறிப்பாடசாலை என ஆலய நிர்வாகம் மிகவும் சிறப்பாக ஆலயத்தை நிர்வகித்து வருகின்றது. ஆண்டு தோறும் சித்திரை மாதம் புதுவருடப் பிறப்பன்று பல லட்சம் பத்தர்கள் புடைசூழ விநாயகப் பெருமானின் திருத்தேர்விழா நடைபெறும். மகிமை மிக்க மருதடியான் திருவருளைப் பெறுவதற்காக பல ஊர்மக்களும் நேர்த்திகடன்களை நிறைவேற்ற இத்தலத்தை நோக்கி தினமும் வந்த வண்ணம் உள்ளனர். இப்புனித தலத்தின் கட்டிட அமைப்பு, நூற்றாண்டு கடந்த சுண்ணாம்பு கற்களாலான நிர்மாணமாக அமைந்திருந்தது ஆலய வசந்த மண்டபம் மற்றும் பரிவார ஆலயங்கள் சீரான அமைப்பில் அமைக்கப்படாது உட்பிரகாரம் மிகவும் நெருக்கமாகவும் பத்தர்களுக்கு முழுமையாக பூஜை வழிபாடுகளை தரிசிப்பதற்கு முடியாத நிலையும் காணப்பட்டது. இந்நிலையில் பழம்பெரும் இத்தலத்தை சிறப்பாக நெறிமுறைக்கு அமைய விசாலமாக அமைக்க வேண்டும் என்ற ஆவல் அடியார்கள் உள்ளத்தில் வியாபித்தது. ஆலய தர்மகத்தா சபை நாடறிந்த சிவாச்சாரியார் சமயப் பெரியோர்களை நாடி ஆலோசனை பெற்றனர். இந்திய சிற்பக் கலைஞர்களை அழைத்து சிவாகம நெறிமுறைக்கு அமைய கருங்கற்களாலான கருவறை அமைப்பைக் கொண்ட அசையா நிலைக் கோவிலை உருவாக்க திட்டமிட்டனர். அனுபவ ஞானமுடைய எண்பது வயது நிறைந்த கீரிமலை சிவஸ்ரீ நகுலேஸ்வலக் குருக்கள், கோப்பாய் சிவஸ்ரீ வ.பரமசாமிக் குருக்கள் முன்னிலையில் ஆலய புணர் நிர்மாணப் திருப்பணி அங்குரார்பணம் நடைபெற்றது. ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ஜெயக்குமாரக்குருக்கள், பாலஸ்தாபனக் கிரியைகளை சிறப்பாக நடத்தி பாலாலயத்தில் விநாயகப் பெருமானையும், பரிவாரத் தெய்வங்களையும் இருத்தி திருப்பணிக் கடமைக்காக ஆலயத்தை ஒப்படைத்தார். மாமல்லபுரச் சிற்பக் கலைஞன் செ.ஞானமூர்த்தி தலைமையில் இரவு பகலாக பிரமாண்டமான திருப்பணி வேலைகள் நடைபெற்றது . இதுவரை நடைபெற்ற திருப்பணிகள் இந்தியாவிலுள்ள சோழர் காலத்திருக்கோவில்களின் வடிவம் போல் அடியார்களின் உள்ளத்தை ஆட்கொள்வதை உணரலாம் புதிய ஆலய புனரமைப்பு மிகவும் விசாலமான அமைப்பாக காணப்படுகிறது. இலங்கையில் சிற்பம் நிறைந்த பெருங்கோவில் என்ற தனித்துவத்தை மருதடியான் திருக்கோவில் பறைசாற்றும் என அனைவரும் கருதுமளவுக்கு நிர்மாண அமைப்பு எழிற்சி தருகின்றது.

முக்கிய திருவிழாக்கள் : கந்தசஷ்டி, சதுர்த்தி, திருவெம்பாவை, லட்சார்ச்சனை, நவராத்திரி, ஐப்பசி வெள்ளி, புத்தாண்டு, தைப்பொங்கல், தைப்பூசம், பஞ்சமுக விநாயகர் மணவாளக்கோலம், சிவராத்திரி.
பூஜை நேரங்கள் : நித்திய பூசை - காலை 6.30; நண்பகல் 12.00; மாலை 4.30
ஆலய முகவரி : மருதடி விநாயகர் ஆலயம்,
                                          மானிப்பாய், யாழ்ப்பாணம்
                                           இலங்கை
தொலைபேசி :
பகல் வேளை :
0094 21 222 3217
0094 21 4591569
இரவு வேளை :
0094 21 222 5412
0094 773618960/ 0094 21 222 2751
மின்னஞ்சல்: info@manipaymaruthady.com

இணையதளம் : http://www.manipaymaruthady.comAdvertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிங்கப்பூரில் ஸ்ரீ ராம நவமி மஹோற்சவ கோலாகலம்

சிங்கப்பூரில் ஸ்ரீ ராம நவமி மஹோற்சவ கோலாகலம்...

சிங்கப்பூர் தமிழ் மொழி விழாவில் ‘எதிர்காலத் தொழில்நுட்பத்தில் தமிழ்’

சிங்கப்பூர் தமிழ் மொழி விழாவில் ‘எதிர்காலத் தொழில்நுட்பத்தில் தமிழ்’ ...

அபுதாபியில் சித்திரை திருவிழா

அபுதாபியில் சித்திரை திருவிழா...

சிங்கப்பூரில் பக்தி இசைக் கச்சேரி

சிங்கப்பூரில் பக்தி இசைக் கச்சேரி...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us