லண்டன் : லண்டனில் முதன் முதலாக ஒலிக்க ஆரம்பித்த சன்ரயிஸ் (சூரியோதயம்) தமிழ் ஒலிபரப்பு சேவைகள் ஆரம்பித்து 20வது ஆண்டை கடந்து விட்டன. சன்ரயிஸ் (சூரியோதயம்) தமிழ் ஒலிபரப்பு (மத்திய அலைவரிசை), 1989 ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதி முதல்(ஐரோப்பாவின் முதல் தமிழ் குரல்) திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் ஒருமணிநேரம் ஒலிபரப்பாக துவங்கப்பட்டு, தற்போது 24 மணிநேர சேவையாக செயல்பட்டு வருகிறது. இலங்கை, இந்திய மற்றும் லண்டன் செய்திகள் பிரதானமாக ஒளிபரப்பப்படுகின்றன. மேலும் சமூக தகவல்கள் அடங்கிய நிகழ்வுகளும் இதில் ஒளிபரப்பாகின்றன.
சன்ரயிஸ் தமிழ் ஒலிபரப்பு பற்றிய குறிப்புக்கள் :
*92 தமிழ் எப்.எம். (பண்பலை அலைவரிசை), (2007 ஏப்ரல் 1 முதல்)
*லண்டன் ஐரோப்பாவில் ஒரே ஒரு தமிழ் பண்பலைவரிசை ஒலிபரப்பு
*தினமும் காலை 6 மணி முதல் 4 மணி வரை நேரடி ஒலிபரப்பு
*பாடல் உரையாடல் பொழுது போக்கு நிகழ்ச்சிகள்
*லண்டன் தமிழ் வானொலி(ஐரோப்பிய –மத்திய கிழக்கு நாடுகளுக்கான செய்தி ஊடகமாக 24 மணி நேர ஒலிபரப்பு ( 1998 யூன் 10 முதல்)
* சிறுவர் இளைஞர்களை எழுத, வாசிக்க- வாரந்தோறும் தலைப்பிட்டு, ஊக்குவித்து வருகின்றனர்.
*10க்கு மேற்பட்ட சிறுவர், இளைஞர்களின் அறிவிப்பாளர் நிகழ்ச்சிகள்
*ஜூன் மாதம் 1ம் தேதியில் இருந்து 10ம் தேதி வரை , உலக புலம்பெயர் சிறுவர் எழுத்தாளர் வாரம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
*இது ஒரு உருவாக்கும் ஊடகமாக செயல்பட்டு வருகிறது. (12 ஆண்டுகளாக சினிமா கலக்காத உலகின் ஒரே ஒரு தமிழ் வானொலியும் கூட)
*கடந்த மாதம் முதல், சோதனையாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இ- தமிழ் எப்.எம், 16 முதல் 26 வரையான வயதினர்க்கான உற்சாக ஒலிபரப்பு, செப்டம்பர் நடுப்பகுதியில் இருந்து முழுவடிவம் காண உள்ளது.
மேலும் விபரங்களுக்கு : நடா மோகன் (அதிபர் - First Audio கலையகம்) - 44 208 548 9050 / 44 7956 25 66 36 ; firstaudio@hotmail.co.uk / info@firstaudio.info.
நைஜீரியாவில் 74வது இந்திய குடியரசு தின அனுசரிப்பு...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.