அருள்மிகு உச்சில் புவனேஸ்வரி அம்மன் ஆலயம், கரணவாய் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அருள்மிகு உச்சில் புவனேஸ்வரி அம்மன் ஆலயம், கரணவாய்

நவம்பர் 28,2010  IST

Comments

அமைவிடம் : இலங்கையின் கரணவாய் கிராமத்தில் அருள்பொங்கும் ஆலயமாக விளங்குவது அருள்மிகு உச்சில் புவனேஸ்வரி அம்மன் ஆலயமாகும். கோயில்கள் பல நிறைந்த இடமாக இக் கிராமம் காணப்படுகிறது. கரணவாயை சுற்றி சிவன் கோவில், அம்மன் கோவில், விநாயகர் கோவில், முருகன் கோவில் ஆகியவற்றுடன் கிராம தெய்வங்களான கண்ணகி, ‌ஐய்யனார், வைரவர், நாச்சிமார், பெரியதம்பிரான், நாகதம்பிரான், காளி உள்ளிட்ட தெய்வங்களுக்கும் தனிதனி கோயில்களும் காணப்படுகின்றன. இக்கோயில் வயல்களால் சூழப்பட்டு உள்ளது. உச்சில் அம்மன் கோயிலுக்கு வடகிழக்காக வற்றாத நீர்ச்சுனையாகிய மாணிக்கவளை தீர்த்தம் உள்ளது. இவ்வாலயத்திற்கு வடக்குப் புறமாக அறநெறிப் பாடசாலை ஒன்றும், கலா மன்றம் ஒன்றும், வாசகசாலை ஒன்றும் காணப்படுகிறது. இக்கோயிலுக்கு அருகே கரவை வெல்லன் பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளது. அம்மனுக்கு நேரெதிராக வயல்தாண்டி முருகன் ஆலயம் அமைந்துள்ளது.

ஆலய பெயர் காரணம் : யாழ்ப்பாணத்தை சங்கிலி மன்னன் ஆண்ட காலத்தில் சைவ குருமார் பரம்பரை இவ்விடம் இருக்கவில்லை. அதனால் சங்கிலி மன்னன் 1520ம் ஆண்டளவிலே சைவ குருமார் பரம்பரையை இவ்விடம் கொண்டு வர விரும்பினான். அவனது விருப்பதிற்கிணங்க சரபோஜி மகாராஜா இந்தியாவிலிருந்த மூன்று சைவ குரு பரம்பரையை யாழ்ப்பாணம் அனுப்பி வைத்தான். அதில் ஒரு குடும்பம் வரணியில் இருந்தது. மற்றவர்கள் திருகோணமலை, மட்டக்களப்பில் இருந்தனர். இதில் வரணியில் இருந்த குடும்பம் இவ்விடத்தில் வந்து குடியேறினர். அப்போது உடுப்பிட்டிக் கிராமத்திலே உடையவர், முதலியார் என்றழைக்கப்பட்டவர்கள் இந்தச் சைவ குருமார் பரம்பரைக்கு அவர்கள் இருந்த நிலத்தை சொந்தமாக எழுதிக் கொடுத்தனர். அந்தச் சைவப் பரம்பரையானது கர்ண பரம்பரை என அழைக்கப்பட்டது. கர்ணபரம்பரை என்பதில் கர்ண என்பது கணக்குப்பார்த்தல் எனப்பொருள்படும். அதாவது சரபோஜி மகராஜா காலத்திலிருந்து அவர்கள் கணக்குப் பார்க்கும் தொழிலையே செய்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. உடுப்பிட்டி உடையார் நிலத்தை சைவகுரு பரம்பரைக்கு எழுதிக் கொடுக்கும் போது காணிக்கு என்ன பெயர் இடலாம் என யோசித்தனர். பின்னர் கர்ணபரம்பரையாக சைவகுருமார் பரம்பரை இருந்ததால் அவ்விடத்திற்கு கர்ணவாய் எனப்பெயரிட்டனர். இக் கர்ணவாய் என்பதே காலப்போக்கில் திரிபடைந்து கருணையாவாக மாறி தற்போது கரணவாயாக மாறி உள்ளது. இவ்வாறாக கரணவாய் பகுதியிலே வயல்கள் சூழ்ந்த இடமாகிய இவ்வாலயம் அமைந்த சூழலில் உள்ள வயல்கள் உச்சில் என்றழைத்தனர். அவ்வாறான உச்சில் வயல் பகுதிக்கு அருகில் இப்புவனேஸ்வரி அம்மன் ஆலயம் அமைந்திருந்ததால் கரணவாய் உச்சில் புவனேஸ்வரி அம்மன் ஆலயம் எனப்பெயர் ஏற்பட்டது.

ஆலயத் தோற்றமும் வளர்ச்சியும் : பராசக்தியின் தோற்றங்களுள் முதன்மையானது புவனேஸ்வரியாகும். அவ்வாறான புவனேஸ்வரி அம்மை எழுந்தருளிருக்கும் இடம் புவனெஸ்வரி பீடம் எனக்கூறப்படுகிறது. இவ்வாலயம் ஏறத்தாள 1870 ம் ஆண்டளவில் மாவிலங்கை மரநிழலிலே தென்னங்கீற்றுக் கொட்டிலிலே சைவ மரபினரான பொன்னுஞானியார் என்பவரால் ஆரம்பித்து வைக்கப்பட்டதாகவும், 1910-1912 ம் ஆண்டு காலத்தில் சுண்ணாம்புக் கல்லினால் மண்டபங்கள் நிர்மானிக்கப்பட்டு வளர்ச்சியுற்றதாகவும் இக்கோயிலின் வரலாறு தெரிவிக்கிறது. மேலும் இவ்வாலய வரலாறுகளை விரிவாக ஆராய்ந்தால், 1870ல் பொன்னு ஞானியார் என்பவர் புவனேஸ்வரி அம்பாளை ஒரு கற்பீடத்திலே பாவனை செய்து மாவிலங்கை மரநிழலிலே தென்னங்கீற்றுக் கொட்டிலமைத்து வழிபட்டு வந்தார் எனக்கூறப்படுகிறது. அவரின் உற்ற நண்பனாக விளங்கும் நாவித சமூகத் தலைவர் வைரவியார் என்பவர் அம்பாளின் அருளை அறிந்து தனக்கு பிள்ளைச் செல்வம் வேண்டிப் புவனேஸ்வரி அம்பாளுக்கு ஒரு விக்கிரகத்தை செய்விக்க நேர்த்திக்கடன் வைத்ததாகவும், தனது எண்ணம் ஈடேறவே நேர்த்திகடனை நிறைவேற்றி உள்ளார். இவரது எண்ணப்படி இந்தியாவிலே கருங்கல்லாலான விக்கிரகம் உருவாக்கப்பட்டு, இந்நிலத்தின் உரிமைக்காரரும் சிவாகம அறிவு நிறைந்தவருமான சிவஸ்ரீ சோமசுந்தரக்குருக்களை சந்தித்து உரையாடியுள்ளார். இவர் மட்டுவில் பண்டித்தலைச்சி கண்ணகை அம்பாளின் நிறைந்த பக்தி கொண்டமையை வெளிப்படுத்தி கண்ணகை அம்மனை இங்கு பிரதிஸ்டை செய்ய எண்ணிக் கொண்டிருப்பதாக கூறினார். இவர்களின் உரையாடலை தொடர்ந்து குருக்களின் ஏற்பாட்டிலே புவனேஸ்வரி அம்பாள், கண்ணகை அம்பாள் சிலைகள் இந்தியாவிலே தேர்ச்சி மிக்க சிற்பிகளால் கருங்கல்லில் வடிக்கப்பட்டது. விக்கிரகங்களை எங்கே பிரதிஷ்டை செய்வதென குழம்பிய வைரவியாருக்கும், குருக்களுக்கும், பொன்னுஞானியாருக்கும் கண்ணகை அம்மன் தனித்தனியே கனவில் வந்து மாணிக்கவளை நீர்த்தடாகத்தினருகே காணப்படும் ஆலமரத்தடியே பிரதிஷ்டை செய்யுமாறு கூறினார். அதனால் புவனேஸ்வரி அம்பாளை மாவிலங்கை மரநிழலிலே பிரதிஷ்டை செய்யுமாறு தெரிவித்ததாக அறிய முடிகிறது. இதற்கமைய மாவிலங்கைக்கருகே ஒரு சிறிய மடாலயத்தை அமைத்து புவனேஸ்வரி அம்பாளையும் குளத்தருகே ஆலமர நிழலிலே ஒரு சிறிய கோட்டிலமைத்து கண்ணகி அம்மனையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர்.

கர்ப்பக்கிரகத்தை அடுத்து மகா மண்டபம், திருத்த மண்டபம், மணிக்கூண்டுக்கோபுரம், முன்வாயில் கோபுரம் ஆகியன த.கா.முருகேசு என்பவராலும் அவரைச் சேர்ந்தோர்களினாலும் அமைக்கப்பட்டன. வசந்த மண்டபம், சப்பறத்திருவிழா உபயகாரர்களினாலும் அமைக்கப்பட்டது. ஏனைய உபயகாரர்களினாலும் ஏனைய அடியார்களது முயற்சியினாலும் மிகுதி கட்டிடவேலைகள் படிப்படியாக அமைத்து முடிக்கப்பட்டன. பரிபாலநத்தின் உதவியுடன் சப்பறம் .தேர் , சகடை முதலான ஊர்திகளும் குதிரை , சிங்கம் முதலான வாகனங்களும் ஆலயத்துக்கு வழங்கப்பட்டன. மேலும் இக்காலத்திலே சுற்றுசுவர், மடப்பள்ளி , களஞ்சியம், வசந்தமண்டபம் உள்ளிட்டவைகளும் நிர்வகிக்கப்பட்டது . திருவூஞ்சல் பதிகம் ஒன்றும் ஆக்கப்பட்டது. அம்பாளின் விக்கிரகம் தோற்றப் பொலிவின்றி இருந்ததால் 1950ம் ஆண்டிலே புதிய விக்கிரகம் ஒன்று இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு ஸ்தாபிக்கப்பட்டது. பழைய விக்கிரகத்தை ம்கா மண்டபத்தில் ஸ்தாபித்தனர். மேலும் விநாயகர், கண்ணகை அம்பாள் விக்கிரகங்கள் உருவாக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு பூசிக்கப்பட்டது. 1976 ம் ஆண்டில் புவனேஸ்வரி அம்பாளுக்கும் ஏனைய கடவுளருக்கும் அஷ்டபந்தன மகாகும்பாபிசேஷம் நடைபெற்றது.

முக்கிய விழாக்கள் : வைகாசி திருவிழாவுடன், 1992ம் ஆண்டு முதல் பூரம் நட்சத்திர தினங்களில் விளக்குபூஜையும் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. ஆடிப்பூர தினத்திலே அருகிலுள்ள சிவன் கோயிலிலிருந்து பால்காவடி எடுத்து அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு செய்வர். நவராத்திரி, சிவராத்திரி, கௌரி விரதம், கந்தசஷ்டி, திருவெம்பாவை உள்ளிட்ட முக்கிய விழாக்கள் அம்பாளுக்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

அற்புதம் நம்பிக்கை : இக்கோயிலில் இரண்டுகால பூசைகள் நடைபெறுகிறது. இங்கு மக்கள் அதிகாலைப் பூசையின்போது தமது கடமைகளுக்கு செல்வதற்கு முன்பாக கடமைகள் இடையூறின்றி நடந்திடும் பொருட்டு இப்புவேஸ்வரி அம்மனை வழிபட்டு செல்கிறார்கள். சிறு குழந்தைகளின் நோய் தீர்க்க சிவாச்சாரியாரால் நூல் முழுவதும் வழங்கும் அடியார்கள் தமது நினைத்த காரியம் நிறைவேற அம்மனை வேண்டி பால்காவடிகளும், பறவைகாவடிகளும், ஆனந்தகாவடிகளும் மேற்கொள்கின்றனர். நேர்திக்கடனாக மக்கள் அன்னதானம் வழங்குவதும் சிறப்பு நிகழ்ச்சியாகும். தண்ணீர்பந்தல் அமைத்து தாகசாந்தி தீர்த்தும், பொங்கல் செய்வதும், மடை பரப்புவதும், அர்ச்சனை அபிசேகம் செய்வதும் மக்களுக்கு உச்சில் புவனேஸ்வரி அம்மன் மீது உள்ள அன்பையும் நம்பிக்கையையும் காட்டும். மகப்பெறு, திருமண பாக்கியம் ஆகியவற்றைப் பெறுவதற்காக நேர்த்திக்கடன் செய்து வழிபடுவோரை இக்கோயிலில் நாள்தோறும் காணமுடிகிறது.

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் சித்திரை இசை விழா

நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் சித்திரை இசை விழா...

அஜ்மானில் புதிய தமிழ் மருத்துவ நிலையம் திறப்பு விழா

அஜ்மானில் புதிய தமிழ் மருத்துவ நிலையம் திறப்பு விழா...

தமிழ் சிஙகள புது வருட விளையாட்டுப் போட்டி

தமிழ் சிஙகள புது வருட விளையாட்டுப் போட்டி...

பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்க மூன்றாம் ஆண்டு துவக்க விழா

பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்க மூன்றாம் ஆண்டு துவக்க விழா...

Advertisement
Advertisement

அமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை : 4 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில், வரும் ...

ஏப்ரல் 22,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)