ஆலய வரலாறு : ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள சாய் சமாஜ் அமைப்பு 1998ம் ஆண்டு அமைக்கப்பட்டது. சைலேஷ் சந்த் தர்சன் என்பவரால் வாராந்திர பஜனை மையமாக வீடு ஒன்றில் இவ்வமைப்பு துவங்கப்பட்டது. தற்போது பிரிஸ்பேனில் சாய் சைலேஷ்வர மந்திரம் என்ற பெயரில் சிறிய மற்றும் அழகிய ஆலயமாக இவ்வமைப்பு உருமாறி இயங்கி வருகிறது. சைலேஷ் சந்த் தர்சன் 1991ம் ஆண்டு தனது இடது முழங்காலில் மிகப் பெரிய கட்டி ஒன்று உருவானதை கண்டறிந்தார். அதன் காரணமாக அமைதியையும், வாழ்வின் மெய்ப் பொருளையும் தேடி தீவிர ஆன்மிக பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் எழுந்தது. இதனால் தனது தாயாகமான ஃபிஜியை விட்டு புறப்பட்ட சைலேஷ் சந்த் தர்சன் இந்தியா வந்தார். இந்தியாவில் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவுடன் அவர் 10 மாதங்கள் தங்கி இருந்தார். பாபாவின் ஆன்மிக மொழிகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, பாபாவின் ஆசிகளையும் பெற்றார். பாபா தனது ஆசி மொழியில், இன்று முதல் உனது பெயர் சாய் சைலேஷ்வரா என்றும், இதுவே நீ அமைக்கும் கோயில், இல்லம், நூலண ஆகியவற்றிற்கு பெயராக விளங்கும் எனவும் குறிப்பிட்டார்.
சத்ய சாய்பாபாவின் ஆசிகளை பெற்ற பின்னர் சைலேஷ் சந்த் தர்சன் தனது வாழ்வில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்வதை உணர்ந்தார். 2003ம் ஆண்டு அன்னை துர்க்கா தேவியின் அருளால் சாய் சமாஜ் அமைப்பிற்கென நிலம் பெறப்பட்டு, ஆலயம் அமைப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டது. பாபாவின் மீது உள்ள தீவிர பக்தியின் காரணமாக தனது இல்லத்தை அழகிய ஆலயமாக மாற்றி அமைத்தார். 2004ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதியன்று முறையாக இவ்வாலயம் திறக்கப்பட்டு, ஆலயத்தின் முக்கிய தெய்வமாக ஸ்ரீ ஷீரடி சாய்பாபாவின் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஸ்ரீ ஷீரடி சாய்பாபாவுடன் விநாயகர் விக்ரஹம் ஒன்றும் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆலயத்தின் மையப் பகுதியில் அழகிய ஆசனம் ஒன்றில் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா வீற்றிருக்கும் நிலையில் விக்ரஹம் அமைக்கப்பட்டுள்ளது, காண்போரை மெய் உருக வைக்கிறது. 2004ம் ஆண்டு குரு பூர்ணிமா தினத்தன்று துர்க்கை, மகாலட்சுமி, விநாயகர் ஆகிய விக்ரஹங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 2006ம் ஆண்டு 40 நாட்கள் பூஜைக்கு பிறகு அர்த்தநாரீஸ்வரர் விக்ரஹரமும் இவ்வாலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
ஆலய முகவரி : Sai Saileshwara Mandiram,
1614 Sandgate Rd, Virginia,
Queensland, Australia- 4014
தொலைப்பேசி : 07 32663192
இ-மெயில் : saisaileshwara@optusnet.com.au
இணையதளம் : http://www.saisamaj.org/
மாலத்தீவில் சேவையாற்றிய தமிழருக்கு கென்டக்கி கர்னல்விருது...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.