அருள்மிகு ராஜராஜேஸ்வரி ஆலயம், ‌கோலாலம்பூர் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அருள்மிகு ராஜராஜேஸ்வரி ஆலயம், ‌கோலாலம்பூர்

மே 26,2011 

Comments

ஆலய வரலாறு : மலேசியாவின் கோலாலம்பூரில் அம்பாங் பகுதியில் அரண்மனையின் தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ள மிகப் பெரிய ஆலயம் அருள்மிகு ராஜ ராஜேஸ்வரி ஆலயமாகும். இக்கோயிலில் ஸ்ரீ யந்திரத்தின் மீது அமர்ந்தபடி காட்சி தருகிறாள், அன்னை ராஜ ராஜேஸ்வரி. பொதுவாக ஸ்ரீ யந்திரம் 9 உள்கட்டங்களை கொண்டதாகும். இவற்றில் கீழ்நோக்கி அமைந்துள்ள 5 முக்கோண வடிவங்கள் சக்தியையும், மேல் நோக்கி அமைந்துள்ள 4 முக்கோண வடிவங்கள் சிவனையும் குறிக்கின்றது. இத்தலத்தில் கோயில் கொண்டுள்ள ராஜ ராஜேஸ்வரி, நான்கு திருக்கரங்கள், 3 கண்கள், மூக்கில் புல்லாக்கு, தூண்டில், கரும்பால் ஆன வில், 5 மலர் அம்புகள் ஆகியவற்றுடன் கருணையே வடிவாக காட்சி தருகிறாள்.
ராஜ ராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 1974ம் ஆண்டு சுப்பைய்யா என்பவரால் கட்டப்பட்டதாகும். ஆன்மிகத்திற்கும், கட்டிடக்கலைக்கும் சான்றாக விளங்கும் இக்கோயிலை அமைப்பதற்கு சுப்பைய்யா பெரும் முயற்சி மேற்கொண்டார். தனது வாழ்நாள், சொத்து ஆகிய அனைத்தையும் இக்கோயில் அமைப்பதற்கென அற்பணித்தார். இக்கோயில் வேம்பு, ஆலம், பாக்கு, தேக்கு ஆகிய மரங்களால் சூழப்பட்ட ரம்யமான சூழலில் அமைந்துள்ளது. மேலும் இக்கோயிலைச் சுற்றி துளசி செடிகளும், மல்லிகை கொடிகளும், கரும்பு தோட்டமும் அமைந்துள்ளன. இக்கோயின் நுழைவு வாயிலில் பக்தர்களின் குளிர்ச்சிக்காக செயற்கை நீர்வீழ்ச்சி ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. க்ளாங் பள்ளதாக்கு பகுதி இந்து சமுதாய மக்களிடையே புகழ்பெற்ற தலமாக இக்கோயில் விளங்குகிறது.
அன்னை ராஜ ராஜேஸ்வரி மீது சுப்பைய்யா கொண்டிருந்த அளவுகடந்த பக்தியும், ஈடுபாடும் அன்னையை மிகவும் கவர்ந்தது. இதனால் சுப்பைய்யாவிற்கு பலமுறை அன்னை ராஜ ராஜேஸ்வரி திருக்காட்சி தந்து, அருள்பாலித்துள்ளார். இக்கோயிலின் மகாகும்பாபிஷேகத்தின் போது புனித மண் எடுப்பதற்காக ஆலய நிர்வாக உறுப்பினர்கள், புரோகிதர்கள் ஆகியோர் அம்பாங் பகுதி ஆற்றங்கரைக்கு சென்றுள்ளனர். மண் எடுத்து விட்டு அவர்கள் ஆலயம் திரும்பிய போது, அன்னை ராஜராஜேஸ்வரி தங்களை பின் தொடர்ந்து வந்ததை உணர்ந்த சுப்பைய்யா, திரும்பி பார்த்துள்ளார். அங்கு அழகே மொத்த வடிவாக அன்னை ராஜ ராஜேஸ்வரி காட்சி கொடுத்து மறைந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு பின்னர் சுப்பைய்யா உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். சுப்பைய்யா இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன், ஆலயத்தின் முன் புறத்தில் உள்ள நந்தவனத்தில் அன்னை ராஜ ராஜேஸ்வரி புன்னகைத்தபடி உலா வருவதை சுப்பைய்யா தனது கனவில் கண்டுள்ளார். இத்தகையதொரு அழகிய இருப்பிடத்தை தனக்கு அமைத்து தந்ததற்கு சுப்பைய்யாவிற்கு அன்னை ராஜ ராஜேஸ்வரி நன்றி தெரிவித்துள்ளார். இது போன்ற ஏராளமான அற்புதங்களை அன்னை ராஜ ராஜேஸ்வரி, தன்னை நம்பி வரும் அடியார்களின் வாழ்வில் அன்றாடம் நிகழ்த்தி வருகிறாள்.
ஆலய முகவரி : Sri Raja Rajeswary Temple, 4 1/2 mile, Jln Ulu Kelang, Ampang, Malaysia.
தொலைப்பேசி : 0342564059

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பாலஸ்தீன வர்த்தக சபை அதிகாரிகளுடன் இந்திய பிரதிநிதி சந்திப்பு

பாலஸ்தீன வர்த்தக சபை அதிகாரிகளுடன் இந்திய பிரதிநிதி சந்திப்பு...

உணவு பொருளாதாரம், பாதுகாப்பாக பேக்கிங் குறித்து காணொலி விவாதம்

உணவு பொருளாதாரம், பாதுகாப்பாக பேக்கிங் குறித்து காணொலி விவாதம்...

கொடை நிகழ்ச்சித்திட்டம்

கொடை நிகழ்ச்சித்திட்டம்...

மஸ்கட்டில் காணொலி வழியாக பக்ரீத் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி

மஸ்கட்டில் காணொலி வழியாக பக்ரீத் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி ...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us