ஆலய வரலாறு : இந்திய கலாச்சாரம் மற்றும் வேத ஆகம முறைப்படி, திராவிட கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் வகையில் அருள்மிகு பராசக்தி ஆலயம் மொரீசியஸ் தீவில் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 180 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து மொரீசியசிற்கு சென்று, அங்குள்ள கரும்பு தோட்டத்தில் பணியாற்றி உள்ளனர். அவர்கள் தாங்கள் வசித்த பகுதியில் சிறிய கோயில் ஒன்றை அமைத்து வழிபாட்டு வந்தனர். இந்நிலையில் 1997ம் ஆண்டு எஸ்.எஸ்.ஆறுமுகம் பிள்ளை என்பவரால் கோயிலுக்கான நிலம் பெறப்பட்டு, தற்போதுள்ள ஆலயம் கட்டப்பட்டது. 2003ம் ஆண்டு ஜூலை 06ம் தேதி இக்கோயிலின் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
மூலவர் சிறப்பு : இக்கோயிலின் கருவறையில் வீற்றிருக்கும் பராசக்தி தேவி, கருணையே வடிவாக காட்சி அளிக்கிறாள். மூலவர் விக்ரஹம் 6 1/4 அடி உயரமுடையதாகும். அம்பாள் பத்து கரங்களுடன், அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறாள்.
பிற தெய்வங்கள் : இக்கோயிலில் முத்து விநாயகர், சப்த கன்னிகைகள், தண்டபாணி தெய்வம், கருப்பர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் மேற்கூரையில் வாஸ்துகுறித்த விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆலய தூண்களில் கணேசர் மற்றும் சுப்பிரமணியரின் உருவ தத்துவங்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.
திருவிழாக்கள் : தைப்பூச காவடி, நவராத்திரி, கந்தசஷ்டி ஆகியன இக்கோயிலில் நடத்தப்படும் முக்கிய விழாக்களாகும். இதுதவிர பவுர்ணமி, சங்கடஹர சதுர்த்தி, கார்த்திகை, விநாயகர் சதுர்த்தி, தமிழ்ப் புத்தாண்டு உள்ளிட்ட விழாக்களும் தவறாது நடைபெற்று வருகிறது.
ஆலய நிர்வாகிகள் : உமாபதி சிவாச்சாரியார், இக்கோயிலின் நிர்வாக தலைவராகவும் ஆலய தலைமை குருக்களாகவும் கடந்த 17 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். திருமதி.ஆறுமுகம் பிள்ளை தலைவராகவும், திரு.கணேசன் செங்கன் செயலாளராகவும், திரு.திருவேங்கடம் பொருளாளராகவும் இருந்து வருகின்றனர்.
ஆலய நேரங்கள் : அனைத்து நாட்களும் காலை 7.00 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 3.00 மணி முதல் 6.00 மணி வரையிலும் ஆலயம் திறந்துள்ளது. (திருவிழா காலங்களில் ஆலய நேரம் மாற்றி அமைக்கப்படுகிறது) Chebel, Mauritius. தொலைப்பேசி : 230.466.3626 பேக்ஸ் : 230.465.0179 இ-மெயில் : contact@shreepeedam.org இணையதளம் : http://www.shreepeedam.org/frontpage - தினமலர் வாசகர் உமாபதி சிவன்
ஆலய முகவரி : Parashakthi Peedam Kalikovil,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டலம் நடத்திய 25-வது இரத்ததான முகாம்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.