ஹேப்பி வேலி இந்துக்கோயில், ஹாங்காங் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஹேப்பி வேலி இந்துக்கோயில், ஹாங்காங்

ஏப்ரல் 06,2012 

Comments

ஆலய குறிப்புக்கள் : ஹாங்காங்கின் ஹேப்பி வேலி பகுதியில் அமைந்துள்ள இந்துக்கோயிலில் இந்து மதத்தின் அடையாளமாகவும், சமூக நிகழ்வுகள் நடைபெறும் மையமாகவும் செயல்பட்டு வருகிறது. சுமார் 15000 இந்து சமூகத்தினர் வாழும் ஹாங்காங்கில், இந்துக்களின் வழிபாட்டு தலமாக இக்கோயில் விளங்குகிறது. ஹாங்காங்கில் உள்ள இந்து மத அமைப்பின் சார்பில் இக்கோயில் நடத்தப்பட்டு வருகிறது. இக்கோயிலில் தியாக வகுப்புக்கள், ஆன்மீக சொற்பொழிவுகள், யோகா வகுப்புக்கள் ஆகியவை நடத்தப்பட்டு வருகிறது. தீபாவளி, நவராத்திரி, ஹோலி உள்ளிட்ட இந்துக்களின் முக்கிய பண்டிகைகளும், கந்தசஷ்டி, சத்யநாராயண பூஜை, ஐயப்ப பூஜை உள்ளிட்ட பூஜைகளும் கொண்டாடப்பட்டு வருகிறது. பெயர் சூட்டுதல், நிச்சயதார்த்தம், திருமணம் உள்ளிட்ட இந்துக்களின் பாரம்பரிய சடங்குகளும் இக்கோயிலின் நடத்தப்படுகிறது. ஞாயிற்றுகிழமை காலை நேரங்களிலும், திங்கள்கிழமை மாலை நேரங்களிலும் ஆன்மிக இசை நிகழ்ச்சிகளும், மத கலந்துரையாடல்களும் தொடர்ந்து இக்கோயிலில் நடத்தப்படுகிறது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு அன்னதான வழங்கப்படுகிறது.
ஹாங்காங் ஹேப்பி வேலி இந்துக்கோயிலில் சத்ய நாராயணர், சிவ பரிவாரங்கள், ஹனுமன், குருநானக் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. வரிசையாக அமைந்துள்ள இச்சன்னதிகளின் முன்புறம் பக்தர்கள் வழிபாடு செய்வதற்கு ஏற்ற வகையில் நீண்ட வழிபாட்டு கூடும் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
ஆலய முகவரி : Happy Valley Hindu Temple,


Near HK Sanatorium Hospital, 1-B Wong Nai Chung Road, Hong Kong Island.


தொலைப்பேசி : 852-25725284
Advertisement
மேலும் ஜப்பான்/சீனா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

வளைகுடாவில் தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சி

வளைகுடாவில் தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சி...

ஷார்ஜாவில் நடந்த கிரிக்கெட் போட்டி

ஷார்ஜாவில் நடந்த கிரிக்கெட் போட்டி ...

சிங்கப்பூர் தமிழ் மொழி விழாவில் “நகைச்சுவை அரங்கம்”

சிங்கப்பூர் தமிழ் மொழி விழாவில் “நகைச்சுவை அரங்கம்”...

அபுதாபியில் தமிழக இளைஞரை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைத்த அய்மான் சங்கம்

அபுதாபியில் தமிழக இளைஞரை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைத்த அய்மான் சங்கம் ...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.