அருள்மிகு செண்பக விநாயகர் ஆலயம், சிங்கப்பூர் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அருள்மிகு செண்பக விநாயகர் ஆலயம், சிங்கப்பூர்

ஜூலை 03,2012  IST

Comments

ஆலய வரலாறு : சிங்கப்பூர் சிலோன் ரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு செண்பக விநாயகர் ஆலயம், சுமார் 150 ஆண்டுகள் பழமையானதாகும். 1850ம் ஆண்டுகளில் செண்பக மரத்தின் அருகில் இருந்த குளத்தில் இருந்து விநாயகர் சிலை கண்டெடுக்கப்பட்டது. செண்பக மரத்தின் அடியிலேயே விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்களால் வழிபாடு நடத்தப்பட்டு வந்தது. இலங்கை தமிழரான எதிர்நாயகம் பிள்ளை என்பவர் இப்பகுதியில் வாழ்ந்த இந்திய தொழிலாளர்களின் உதவியுடன் செண்பக மரத்தடியில் சிறிய கீற்று கொட்டகையில் தற்காலிக கோயில் அமைத்து வழிபட்டார். செண்பக மரத்தடியில் அமர்ந்து அருள்பாலிப்பதால் இவ்விநாயகர், பக்தர்களால் செண்பக விநாயகர் என அழைப்பட்டார்.
1909ம் சுமார் 300 குடும்பங்களைச் சேர்ந்த இலங்கை தமிழர்கள் ஒன்று கூடி சிங்கப்பூர் இலங்கை தமிழர்கள் கழகம் அமைக்கப்பட்டது. நாளுக்கு நாள் ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியதால் பூஜைகள், திருவிழா வைபவங்கள் ஆகியவற்றை முறையாக நடத்த 1913ம் ஆண்டு ஆலய நிர்வாகக் குழுவால் ஆலயத்திற்கென புரோகிதர் ஒருவர் நியமிக்கப்பட்டார். 1923ம் ஆண்டு ஆலயத்திற்காக புதிய நிலம் வாங்கப்பட்டு, ஆலய விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 1923ம் ஆண்டு முதல் ஆலயத்திற்கான நிர்வாகக் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு, விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 1929ம் ஆண்டு புதிய ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு 1930ம் ஆண்டு சிவன், ஆண்டாள், சுப்ரமணியர், வைரவர், நாகேஸ்வரர் உள்ளிட்ட தெய்வங்களின் சன்னதிகள் அமைக்கப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இரண்டாம் உலகப் போரின் போது நடைபெற்ற தாக்குத‌லால் ஆலயம் சிதைவடைந்தது. 1949ம் ஆண்டு ஆலய தலைவர் தில்லைநாதன் தலைமையில் ஆலயம் சீரமைக்கப்பட்டு சுமார் 6 ஆண்டுகளுக்கு பின் 1955ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த புதிய ஆலயத்தில் புதிய அறைகள், மடப்பள்ளி, வகுப்பறைகள், திருமண மண்டபம், நூலகம் ஆகியன அமைக்கப்பட்டன.
ஆலய சுவர்கள் மற்றும் தூண்களில் விரிசல்கள் ஏற்பட்டதை அடுத்து 1998ம் ஆண்டு சிங்கப்பூர் இலங்கை தமிழர்கள் கழகத்தின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆலயம் புதிதாக சீரமைக்கப்பட்டது.


ஆலய நேரம் : காலை 5.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் ஆலயம் திறந்து வைக்கப்படுகிறது.
ஆலய முகவரி : Sri Senpaga Vinayagar Temple,


19 Ceylon Road, Singapore 429613


இமெயில் : senpaga@vinayagarsen.org.sg

இளையதளம் : http://www.senpaga.org.sg


Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மலேசியாவில் தைப்பூச விழா கொண்டாட்டம் துவக்கம்

மலேசியாவில் தைப்பூச விழா கொண்டாட்டம் துவக்கம்...

பஹ்ரைனில் உழவர் திருவிழா

பஹ்ரைனில் உழவர் திருவிழா ...

கோலாகலமாக கொண்டாடப்பட்ட தைவான் தமிழ்ச் சங்க 7ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா

கோலாகலமாக கொண்டாடப்பட்ட தைவான் தமிழ்ச் சங்க 7ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா...

அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) மக்கள் சேவை உறுதிமொழி

அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) மக்கள் சேவ...

Advertisement
Advertisement

குஜராத், மகாராஷ்டிராவில் நிலஅதிர்வு

புதுடில்லி: குஜராத் மகாராஷ்டிரா மாநிலங்களில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது: குஜராத்மாநிலம் சவுராஷ்டிரா பகுதியில் இன்று (20 ம் தேதி) ...

ஜனவரி 20,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)