ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம், பெராக்,மலேசியா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம், பெராக்,மலேசியா

ஜூலை 06,2012 

Comments

ஆலய அமைப்பு : மலேசியாவின் புலாபங்கோர் பகுதியில் அழகிய கடற்கரையோரம் அமைந்துள்ளது அருள்மிகு பத்ரகாளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் காளியம்மன் சக்தி வடிவில் அமர்ந்த நிலையில் தாய் அன்புடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள். பங்கோர் பகுதி மக்களின் காவல் தெய்வமாகவும், வளம் தரும் தெய்வமாகவும் ஸ்ரீ பத்ரகாளியம்மன் விளங்குகிறாள். பங்கோர் கடலோரப் பகுதி மக்களின் ஆன்மிக கலங்கரை விளக்கமாக இக்கோயில் திகழ்கிறது.ஆலய வரலாறு : சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் இருந்து வந்த மீனவ மக்களால் காளியம்மன் கோயில் அமைக்கப்பட்டது. கடுமையான கடல் அலைகளில் இருந்து தங்களை காப்பதற்காக கோயில் அமைத்து அம்மனை வழிபட்டு வந்தனர். துவக்கத்தில் திரிசூலம் மட்டும் பிரதிஷ்டை செய்து, கடலுக்கு செல்லும் முன் கற்பூரம் மற்றும் விளக்கேற்றி வழிபட்டு வந்துள்ளனர். பின்னர் விலங்குகளையும் பலியிட்டு வழிபட துவங்கினர். பின்னர் பக்தர்களின் முயற்சியால் வேப்ப மரத்தின் அடியில் ஆலயம் புனரமைக்கப்பட்டு, காளியம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. துவக்க காலத்தில் கடல்கரைக்கு மிக அருகில் ஆலயம் அமைந்திருந்ததால் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் கடல் அலைகள் மிக உயரமாக எழுந்து காளியம்மனின் திருவடிகளை வருடி சென்றது.


ஆலய அற்புதங்கள் : காளியம்மன் நிகழ்த்திய அற்புதங்கள் குறித்து ஏராளமான கதைகள் பக்தர்களால் கூறப்படுகிறது. ஆலயத்தின் அருகில் வாழ்ந்து வந்த பார்வையற்ற பக்தர் ஒருவர் தனது நிலை குறித்து தினமும் காளியம்மனிடம் முறையிட்டு வந்தார். ஒருநாள் அவருக்கு தெய்வீக குரல் ஒன்று அசரீரியாக ஒலித்து, ஆலயத்தில் தினமும் விளக்கேற்றி வந்தால் கண்பார்வை திரும்பும் என தெரிவித்தது. அதுன்படி அவரும் தினமும் அம்மனுக்கு விளக்கேற்றி வந்தார். விரைவில் அவருக்கு கண்பார்வை கிடைத்தது. அன்று முதல் அன்னையின் தீவிர பக்தராக மாறிய அவர், தான் இறக்கும் வரை ஆண்டுதோறும் மாசி மகம் திருவிழாவின் போது அம்மனக்கு காவடி எடுத்து வந்தார். இன்னொருமுறை ஆலயத்தில் இருந்த அம்மனின் ஐம்பொன் சிலை கொள்ளையர்களால் திருடப்பட்டு, கடலில் வீசப்பட்டது. இதுகுறித்து வேதனை அடைந்த பக்தர் ஒருவரின் கனவில் சென்று, தான் கடலில் இருக்குமாறும் தன்னை மீட்டு ஆலயத்தில் நிர்மானிக்குமாறும் கட்டளையிட்டதுடன் அதற்கு தானே வழியும் காட்டினாள். மிகவும் மகிழ்ச்சி அடைந்த பக்தர்கள் அம்மனை மீட்டு, திருவிழா எடுத்து தங்களின் மகிழ்ச்சியை கொண்டாடினர். பவுர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் கடற்கரை பாறைகளில் காளியம்மன் கருங்கூந்தலுடன் நிலவை போல் ஜொலித்தபடி அமர்ந்திருப்பதை பக்தர்கள் பலரும் கண்டுள்ளனர். அது மட்டுமின்றி காளியம்மன் சிறிய பெண் வடிவில் காலில் கொலுசு அணிந்துபடி கருவறையை சுற்றி ஓடி விளையாடுவதையும் பக்தர்கள் பலர் கண்டுள்ளனர்.
கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோயில் சூரியன் மற்றும் கடலின் கடுமையான தாக்கங்களில் இருந்து பக்தர்களை காளியம்மன் காத்து வருவதாக நம்பப்படுகிறது. கருவறைக்கு முன் சுமார் 60 கிலோகிராம் எடையுள்ள 6 அடி உயர ஐம்பொன்னால் ஆன திரிசூலம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மாசி மகத்தன்று ஆலய வருடாந்திர திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. ஆண்டு திருவிழாவின் போது வீதிஉலா வரும் அம்மன், கடலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கடல் தீர்த்தத்தில் நீராடி பிறகே ஆலயத்திற்கு மீண்டும் கொண்டு வரப்படுகிறாள்.
ஆலய முகவரி : Sri Pathra Kaliamman Temple,


Sungai Pinang Besar, Pangkor,


Perak, Malaysia.
Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிசெல்ஸ் ஆலய தைப்பூச கோலாகலம்

சிசெல்ஸ் ஆலய தைப்பூச கோலாகலம்...

கலிஃபோர்னியா சாக்கரமெண்டோவில் ஜனவரி மாதம் தமிழ் பாரம்பரிய மாதம்

கலிஃபோர்னியா சாக்கரமெண்டோவில் ஜனவரி மாதம் தமிழ் பாரம்பரிய மாதம்...

சிங்கப்பூர் அருள்மிகு தண்டாயுதபாணி ஆலய தைப்பூச கோலாகலம்

சிங்கப்பூர் அருள்மிகு தண்டாயுதபாணி ஆலய தைப்பூச கோலாகலம்...

சிங்கப்பூரில் தைப் பூசக் கோலாகலம்

சிங்கப்பூரில் தைப் பூசக் கோலாகலம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.