ஹாங்காங் ஹரே கிருஷ்ணா கோயில் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஹாங்காங் ஹரே கிருஷ்ணா கோயில்

மே 04,2008 

Comments

ஹாங்காங்கில் 1972ம் ஆண்டு புரிஜன தாசா என்பவரின் சீடர் ஸ்ரீலா பிரபுபாடா என்பவர் கிருஷ்ண பக்தி இயக்கத்தை ஆரம்பித்தார். இவர்தான் அங்கு இஸ்கான் கோயிலை நிறுவினார்.

கோயிலின் அமைப்பு: கோயிலுக்குள் நுழைந்தவுடன், இஸ்கான் சங்கத்தின் அங்கீகாரப்பலகை   வைக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இதற்கு அருகிலேயே கோயிலின் அன்றாட நிகழ்வுகளை புகைப்படங்களுடன் அறிவிக்கும் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. மூலசன்னதிக்கு செல்வதற்கு முன்னதாக உள்ள அறையில், புத்தகங்கள், குறுந்தகடுகள் மற்றும் பரிசுப் பொருட்களும் பெருமளவில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இதில் ஆன்மிகப் புத்தகங்கள்,  தத்துவங்கள் மற்றும் சைவ உணவு முறை மட்டுமல்லாது பஜனை, கீர்த்தனைகள் அடங்கிய குறுந்தகடுகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள கோயில் அறை, மார்பிள் தரை, கண்ணாடி தூண்கள் மற்றும்  அழகிய மின்விளக்குகளால் எழில்மிகு முறையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணாடி பெட்டகங்கள், அழகிய வடிவங்களால் ஆன சிற்பங்கள் பொறிக்கப்பட்டு இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டதாகும். கோயிலின் இடது பக்க சுவரில், பகவான் கிருஷ்ணரின் வாழ்வின் பல்வேறு நிகழ்வுகளும், வலது புறத்தில் பகவான் சைதன்யர் வாழ்வின் பல்வேறு நிகழ்வுகளும் சித்தரிக்கப்பட்டுள்ளன. மேலும், இக்கோயிலின் மேற்கிலுள்ள வெள்ளை நிறக்கதவில், கிருஷ்ணரின் தசாவதாரக் காட்சிகள், மிக நேர்த்தியான முறையில் சிற்பங்களாக செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இதற்கு அருகில், இஸ்கான் சங்க நிர்வாகியான பக்திவேதாந்த சுவாமி பிரபுபடாவின் சிலை நிறுவப்பட்டுள்ளது. அழகிய வேலைப்பாடுடனான வெள்ளைக் கதவுகள், கவுர நித்தை வழிபாடு நடைபெறும் அநேக நேரங்களில் திறக்கப்படுகிறது. பலிபீடத்தின் வலது புறம், காளி மற்றும் சைதன்யரின் திருவுருவங்களும், வெண் நிறத்தாலான மூலவர் நித்யானந்தத்திற்கு அருகில் பலராமரின் திருவுருவமும், பலிபீடத்தின் இடப்புறம், பார்ப்பவர்கள் அனைவரின் மனதையும் மயக்கும் வண்ணம் அனைத்து உருவங்களும் வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு காலங்களில்  ஆராதனை நடத்தப்படுகின்றன. அந்நேரங்களில், பக்தர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் அனைவரும் கோயிலில் கூடி , பிரார்த்தனை பாடல்கள், மந்திரங்கள் மற்றும் இறைவனின் புகழை போற்றும் பாடல்கள் ஆகியவற்றை பாடுகின்றனர்.
முக்கிய விழாக்கள்: பலராம பூர்ணிமா, ஷ்ரீ கவுர பூர்ணிமா, கிருஷ்ண ஜெயந்தி(ஜென்மாஷ்டமி), ரத யாத்திரை,சஸ்திர தானம், கோவர்த்தன பூஜை,ஷ்ரீல பக்தவிநோத தகுரா தோற்ற தினம்,
ராதாஷ்டமி  ஆகியன இக்கோயிலில் முக்கிய விழாக்களாக கொண்டாடப்படுகின்றன.

கோயில் முகவரி: 6th Floor Ocean View Court, 27A Chatham Road South, Tsim Sha Tsui, Hong Kong, China; Phone: 852 - 2739 6818, Fax: 852 - 2724 2186; Mail: iskconhk@intercon.net 

Advertisement
மேலும் ஜப்பான்/சீனா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

கோலாலம்பூரில் முருகன் திருக்கல்யாணம்

கோலாலம்பூரில் முருகன் திருக்கல்யாணம்...

வடஅமெரிக்காவில் நவம்பர் மாத இலக்கியக் கூட்டம்

வடஅமெரிக்காவில் நவம்பர் மாத இலக்கியக் கூட்டம்...

வெளிநாடு வாழ் தமிழர்கள் தாய்மொழியையும் தலைமுறை பெருமையையும் வளர்க்கிறார்களா : பன்னாட்டு பட்டிமன்றம்

வெளிநாடு வாழ் தமிழர்கள் தாய்மொழியையும் தலைமுறை பெருமையையும் வளர்க்கிறார்களா : பன்னாட்ட...

நவம்பர் 29 வரை அமெரிக்காவில் உலக திருப்புகழ் அடியார்கள் சங்கமம்

நவம்பர் 29 வரை அமெரிக்காவில் உலக திருப்புகழ் அடியார்கள் சங்கமம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us