மத்திய புளோரிடா இந்து சமூக ஆலயம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மத்திய புளோரிடா இந்து சமூக ஆலயம்

மே 04,2013 

Comments

ஆலய வரலாறு : மத்திய புளோரிடா பகுதியில் இந்து சமூகத்தினரால் அமைக்கப்பட்ட இந்த ஆலயம், வேத ஆகம விதிகளின்படியும், வாஸ்து சாஸ்திர அடிப்படையிலும் கட்டப்பட்டதாகும். இப்பகுதி பக்தர்களின் 4 ஆண்டு கால கடின உழைப்பில் கட்டப்பட்ட இவ்வாலயம் 2005ம் ஆண்டு ஜூன் 19ம் தேதியன்று திறக்கப்பட்டது. இன்று இப்பகுதியின் ஆன்மீக, கலாச்சார, ஆத்ம தத்துவங்களை வளர்க்கும் முக்கிய தலமாக இவ்வாலயம் திகழ்கிறது. துவக்கத்தில் சிறிது காலம் மிகச் சிறிய அமைப்பாக செயல்பட்டு வந்த இவ்வாலயம், இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட கலைஞர்களால் இந்திய கலை மற்றும் கலாச்சாரங்களின் அடிப்படையிலும், கட்டிட அமைப்பின்படியும் புதிய ஆலயமாக எழுப்பப்பட்டது.

ஆலய தெய்வங்கள் : இவ்வாலயத்தில் வெங்கடேஷ்வரர், துர்க்கா தேவி, கணேசர், சுப்ரமணியர், ஐயப்பன், லட்சுமி தேவி, சரஸ்வரதி தேவி, காளி மாதா, ஆண்டாள், ராதா-கிருஷ்ணர், ராம பரிவாரங்கள், நவகிரகங்கள், சிவன், கருடாழ்வார் உள்ளிட்ட தெய்வங்களுக்கு தனித்தனியே சன்னதிகள் அமைக்கப்பட்டு, வேத முறைப்படி பூஜைகளும் நடைபெற்று வருகிறது.

ஆலய நேரம் :
திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8.30 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்துள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஆலயம் திறந்துள்ளது.

ஆலய முகவரி :
Hindu Society of Central Florida
இமெயில் : info@hindutempleorlando.org
தொலைப்பேசி : (407) 699-5277
இணையதளம் :http://www.hindutempleorlando.org

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்துக்கு லண்டன் வழங்கிய உலக மகா விருது

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்துக்கு லண்டன் வழங்கிய உலக மகா விருது...

குயின்ஸ்லாந்து தமிழ்ச்சங்கம் நடத்தும் கவிதைப் போட்டி

குயின்ஸ்லாந்து தமிழ்ச்சங்கம் நடத்தும் கவிதைப் போட்டி...

லயன்ஸ் சங்க நண்பர்கள் மூலம் ஜெத்தா முத்தமிழ்ச் சங்கத்தின் தொடர் சேவை

லயன்ஸ் சங்க நண்பர்கள் மூலம் ஜெத்தா முத்தமிழ்ச் சங்கத்தின் தொடர் சேவை...

துபாயில் சிறப்பு உளவியல் நிகழ்ச்சி

துபாயில் சிறப்பு உளவியல் நிகழ்ச்சி ...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.