வடக்கு அலபாமா இந்து கலாச்சார மைய ஆலயம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

வடக்கு அலபாமா இந்து கலாச்சார மைய ஆலயம்

மே 07,2013  IST

Comments

ஆலய வரலாறு : வடக்கு அலபாமா இந்து கலாச்சார மைய ஆலயம் 2005ம் ஆண்டு ஜூன் மாதம் திறக்கப்பட்டது. சுமார் ஒரு வார காலம் நடைபெற்ற இந்த விழாவில் தெய்வங்களின் பிரதிஷ்டை நடைபெற்றது. இவ்விழாவில் இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு ஆன்மிக தலைவர்கள் கலந்து கொண்டனர். சர்வஜன மந்திர் என்றே அனைவராலும் இவ்வாலயம் அழைக்கப்படுகிறது. வாரத்தின் அனைத்து நாட்களும் காலை மற்றும் மாலை வேளைகளில் பக்தர்களின் தரிசனத்திற்காக ஆலயம் திறக்கப்படுகிறது. சனாதன தர்மத்தின் அடிப்படையில் இயங்கும் இக்கோயில் ஆன்மிக மற்றும் கலாச்சாரங்களை வளர்க்கும் மையமாக செயல்பட்டு வருகிறது.

ஆலய தெய்வங்கள் : முதல்கட்டமாக ஜகந்நாதர், பாலபந்ரா மற்றும் சுபத்ரா ஆகிய தெய்வங்கள் ஆலயத்தின் மையப்பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. பின்னர் இடது புறத்தில் கணேசரும், வலது புறத்தில் வெங்கடேஷ்வரரும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. மற்ற 3 பகுதிகளிலும் 2006ம் ஆண்டு வேத ஆகம முறைப்படி பிற தெய்வங்கள் பிர‌திஷ்டை செய்யப்பட்டன. மகாலட்சுமி, ராதா கிருஷ்ணன், ராம பரிவார், நவகிரகங்கள், சிவ பார்வதி, காளி, ஹனுமன், துர்க்கை உள்ளிட்ட தெய்வங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. மகாவீரர், பர்ஸ்வநாத், புத்தர், சரஸ்வதி ஆகிய தெய்வங்கள் 2007ம் ஆண்டு பிரதி்ஷ்டை செய்யப்பட்டது.

ஆலய நேரம் : திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்துள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஆலயம் திறந்துள்ளது.

ஆலய முகவரி :
Hindu Cultural Centre of North Alabama,
14840 Smith Drive, Harvest, AL 35749
தொலைப்பேசி : 256-771-7730
இமெயில் : hccna9@gmail.com
இணையதளம் : http://www.hccna.com/

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் சித்திரை இசை விழா

நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் சித்திரை இசை விழா...

தோஹா கத்தாரில் முதல் மணற்கலை போட்டி

தோஹா கத்தாரில் முதல் மணற்கலை போட்டி...

குவைத், பாவேந்தர் கழகத்தின் “களம்-73”

குவைத், பாவேந்தர் கழகத்தின் “களம்-73” ...

அட்லாண்டா லட்சுமி தமிழ் பயிலும் மையம் - ஆண்டு விழா

அட்லாண்டா லட்சுமி தமிழ் பயிலும் மையம் - ஆண்டு விழா...

Advertisement
Advertisement

மோடியை எதிர்த்து சமாஜ்வாதியில் ஷாலினி

லக்னோ: உ.பி. மாநிலம் வாரணாசி லோக்சபா தொகுதியில் மீண்டும் போட்டியிட வேண்டி பிரதமர் மோடி இம்மாத இறுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ள நிலையில் , மோடியை எதிர்த்து ...

ஏப்ரல் 23,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)