டுலிடோ இந்துக் கோயில் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

டுலிடோ இந்துக் கோயில்

மே 07,2013  IST

Comments

ஆலய வரலாறு : ஒஹிஒ மாகாணத்தின் புகழ்பெற்ற நகரமான டுலிடோ பகுதி இந்த இந்து‌க்கோயில் அமைந்துள்ளது. 1982ம் ஆண்டு இக்கோயில் உருவாக்கப்பட்டது. பின்னர் 1989ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புதிதாக நிலம் பெறப்பட்டு நிரந்தரமான கட்டிடத்தில் இக்கோயில் அமைக்கப்பட்டது. இக்கோயில் இந்து மதம், கலாச்சாரம் மற்றும் ஆன்மிக செயல்பாடுகள் நடைபெறும் இடமாக திகழ்கிறது. இப்பகுதியில் வாழும் 400 இந்து குடும்பத்தினர்களும், டுலிடோ பல்கலைகழகத்தில் படிக்கும் சுமார் 300 இந்திய மாணவர்களும் இக்கோயிலில் நடைபெறும் வைபவங்களில் தவறாது கலந்து கொள்கின்றனர். இக்கோயிலில் வழிபாடுகள், ஆன்மிக சொற்பொழிவுகள், மதம் சார்ந்த கூட்டங்கள், கலாச்சார நிகழ்வுகள் உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டு வருகின்றனர். இக்கோயிலில் தீபாவளி, நவராத்திரி உள்ளிட்ட அனைத்து இந்து மற்றும் இந்திய பண்டிகைகள் தவறாது கொண்டாடப்படுகின்றன. இந்து பாரம்பரியம் மற்றும் ஆன்மிக கொள்கைகளை விளக்கும் வகுப்புக்களும், திருமண வைபவங்களும் நடத்தப்படுகிறது.


ஆலய நேரம் :
செவ்வாய் முதல் வெள்ளிக்கிழமை வரை நாள்தோறும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஆலயம் திறந்துள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 9 மணி முதல் பகல் 2 மணிவரை ஆலயம் திறந்துள்ளது. திங்கள் கிழமைகளில் கோயில் அடைக்கப்பட்டுள்ளது.

ஆலய முகவரி :
Hindu Temple of Toledo,
4336 King Road, Sylvania, OH 43560
தொலைப்பேசி : 419 843 4440
இமெயில் : hindutempletoledo@gmail.com
இணையதளம் : http://www.hindutempleoftoledo.org

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் சித்திரை இசை விழா

நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் சித்திரை இசை விழா...

தோஹா கத்தாரில் முதல் மணற்கலை போட்டி

தோஹா கத்தாரில் முதல் மணற்கலை போட்டி...

குவைத், பாவேந்தர் கழகத்தின் “களம்-73”

குவைத், பாவேந்தர் கழகத்தின் “களம்-73” ...

அட்லாண்டா லட்சுமி தமிழ் பயிலும் மையம் - ஆண்டு விழா

அட்லாண்டா லட்சுமி தமிழ் பயிலும் மையம் - ஆண்டு விழா...

Advertisement
Advertisement

மர்மப்பை:: நிபுணர்கள் சோதனை

மதுரை:காஜிமார்தெருவில் பள்ளிவாசல் அருகே மர்மப் பை இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. வெடிகுண்டு நிபுணர்கள் மர்மப்பையை கைப்பற்றி சோதனை செய்து வருகின்றனர். ...

ஏப்ரல் 22,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)