ஸ்ரீ வெங்கடேஷ்வரர் தாமரை ஆலயம், விர்ஜினியா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஸ்ரீ வெங்கடேஷ்வரர் தாமரை ஆலயம், விர்ஜினியா

மே 31,2013 

Comments

ஆலய வரலாறு : விர்ஜினியாவின் ஃபேர்ஃபேக்ஸ் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ வெங்கடேஷ்வரர் தாமரை ஆலயம். வடக்கு விர்ஜியானில் பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு ஆன்மிக, கலாச்சார, பாரம்பரிய ‌சேவை புரிவதற்காக 2003ம் ஆண்டு இவ்வாலயம் அமைக்கப்பட்டது. 18 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த இவ்வாலயம் குளத்தில் 8 இதழ்களைக் கொண்ட தாமரை மலர் விரிந்தது போன்ற வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது, இதன் தனிச்சிறப்பாகும். இந்த 8 இதழ்களும் அஷ்டலட்சுமி மந்திரத்தை விளக்கும் விதம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஆன்மிக மற்றும் பாரம்பரிய கலாச்சாரங்களை இளைய தலைமுறையினருக்கு எடுத்துக் கூறும் வகையில் இவ்வாலயம் செயல்பட்டு வருகிறது. இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கடந்த 4 ஆண்டுகளில் இவ்வாலயம் பல வகைகளிலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஆலய தெய்வங்கள் :
கருவறையில் ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக வெங்கடேஷ்வர பெருமாள் காட்சி தருகிறார். இவர்களைத் தவிர ராம பரிவாரம், மகாலட்சுமி தாயார், ஆண்டாள், கிருஷ்ணர், சுதர்சனர், ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியார்களின் பஞ்சலோக சிலைகளும் 2003ம் ஆண்டு நிர்மானிக்கப்பட்டுள்ளன. ஆலயத்தை சீரமைக்கும் பணிகள் 2010ம் ஆண்டு துவங்கி நடைபெற்று வருகின்றன.

ஆலய நேரம் : வார நாட்களில் காலை 8.30 மணி முதல் பகல் 11.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் ஆலயம் திறந்துள்ளது. வார இறுதி நாட்களில் காலை 8 மணி முதல் பகல் 2.30மணி வரையிலும், மாலை 3.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் ஆலயம் திறந்துள்ளது.

ஆலய முகவரி : Sri Venkateswara Lotus Temple,
12501 Braddock Road, Fairfax, VA, 22030
தொலைப்பேசி : 703-815-4850
இமெயில் : management@svlotustemple.org

இணையதளம் : http://www.svlotustemple.org/

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

அயலகம் ஆராதித்த தமிழ்க்கவிஞர்

அயலகம் ஆராதித்த தமிழ்க்கவிஞர்...

அக்.,25, டோக்கியாவில் தமிழில் தொழில் முனைவோர் பயிற்சி பட்டறை

அக்.,25, டோக்கியாவில் தமிழில் தொழில் முனைவோர் பயிற்சி பட்டறை...

சிங்கப்பூரில் நவராத்திரி ஏழாம் நாள் விழா

சிங்கப்பூரில் நவராத்திரி ஏழாம் நாள் விழா...

ஷார்ஜாவில் மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஷார்ஜாவில் மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.