மலிபு இந்துக் கோயில், கலிபோர்னியா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மலிபு இந்துக் கோயில், கலிபோர்னியா

ஜூன் 04,2013 

Comments

ஆலய வரலாறு : கலிபோர்னியாவின் மலிபு நகரிற்கு அருகில் உள்ள கலபாசாஸ் பகுதியில் அமைந்துள்ளது, மலிபு இந்துக் கோயில். 1981ம் ஆண்டு கட்டப்பட்ட இக்கோயிலின் முக்கிய தெய்வமாக வெங்கடேஷ்வரர் காட்சி தருகிறார். இயற்கை எழில் சூழ்ந்த இவ்வாலயம் தெற்கு கலிபோர்னியாவில் வசிக்கும் இந்து ஆலய சமூகத்தினரால் நடத்தப்பட்டு வருகிறது. இக்கோயில் தென்னிந்தியாவின் பாரம்பரிய முறைப்படி கட்டப்பட்டுள்ளது. தியானம், சுற்றுலா, கலாச்சார நிகழ்ச்சிகள், இந்துக்களின் விழாக்கள் ஆகியன நடத்துவதற்கு ஏற்றாற் போல் பரந்த நிலப்பரப்பை கொண்டதாக இக்கோயில் விளங்குகிறது. இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள இக்கோயிலில் ஒருபுறம் வெங்கடேஷ்ரருக்கும், மறுபுறம் சிவனுக்கும் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. மற்ற தெய்வங்களும் கோயிலின் இரு பகுதிகளிலும் காட்சி அளிக்கின்றன. ஆலய நேரம் : கோடை காலங்களில் வார நாட்களில் காலை 9 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், கோடை கால வார இறுதிநாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை ஆலயம் திறந்துள்ளது. குளிர்கால வார நாட்களில் காலை 9 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணிவரையிலும் ஆலயம் திறந்துள்ளது. குர்கால வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை ஆலயம் திறந்துள்ளது. ஆலய முகவரி : Malibu Hindu Temple,
1600 Las Virgenes Canyon Road, Calabasas, CA 91302தொலைப்பேசி : (818) 880-5552 இணையதளம் : http://malibuhindutemple.org/

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிங்கப்பூரில் 10 ஆண்டுகளில் 100 நிகழ்ச்சிகள் நடத்திய ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம்

சிங்கப்பூரில் 10 ஆண்டுகளில் 100 நிகழ்ச்சிகள் நடத்திய ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்...

குருமகானின் கார்த்திகை தீப ஒளி திருநாள் அருளுரை

குருமகானின் கார்த்திகை தீப ஒளி திருநாள் அருளுரை...

பட்டாசாய் பட்டிமன்றமும்,மத்தாப்பாய் பாட்டுமன்றமும்-சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் தீபாவளி நிகழ்வுகள்

பட்டாசாய் பட்டிமன்றமும்,மத்தாப்பாய் பாட்டுமன்றமும்-சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்...

சிங்கப்பூரில் தீபாவளி சிறப்பு கவியரங்கம்

சிங்கப்பூரில் தீபாவளி சிறப்பு கவியரங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.