ஆலய குறிப்பு : நியூஸிலாந்தின் தலைநகரம் வெலிங்டனில் குறிஞ்சி குமரன் கோயில் உள்ளது. இங்குள்ள இந்தியர்கள் மற்றும் ஸ்ரீலங்காவை சேர்ந்த தமிழர்கள் அனைவரும் சேர்ந்து இக்கோயிலை நிர்மாணித்துள்ளார்கள். எல்லா விதமான பூஜைகளும், எல்லா விசேஷங்களும் மிகச்சிறப்பான முறையில் வழிபடுகிறார்கள். முருகனுக்கென்று அமைந்த ஆலயம் என்றாலும் இதில் விநாயகர், சிவன், அம்மன், நவகிரஹங்கள் என்று அணைத்து தெய்வத்திற்கும் தனி சன்னதி நிறுவி மிக அழகான முறையில் பூஜைகள் நடந்து வருகிறது. இங்குள்ள இந்துக்களுக்கு இந்த ஆலயம் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. விரைவில் வெங்கடேச பெருமாளுக்காக தனி ஆலயம் அமைக்க உள்ளார்கள். அதற்கான ஏற்பாடுகள் மிக மும்முரமாக நடக்கிறது. நன்கொடை அளிக்க விரும்போவோர் கோயில் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு அளிக்கலாம்.
ஆலய முகவரி : Kurinchi Kumaran Temple,
3 Batchelor St
Newlands,
Wellington 6037, New Zealand
ஆலய தொலைப்பேசி : 04 4774346
இணையதளம் : http://hindutemple.co.nz/
- நமது செய்தியாளர் சந்திரா சங்கரன்
ஹாஜிகளின் நலனுக்காக சவூதியில் 129வது இரத்ததான முகாம்....
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.