தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் (TACA,Sydney) ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 2011ம் ஆண்ட அக்டோபர் மாதம் 24ம் தேதி சிட்னி வாழ் தமிழர்களின் தேவையறிந்து மாநில அரசாங்கத்தில் பதிவு செய்து துவக்கப்பெற்றது. இந்த அமைப்பு, * சிட்னி வாழ் தமிழ் மக்களை ஒன்றிணைக்கும் ஒரு கூட்டமைப்பாகும்.* தமிழர் கலாச்சாரத்தை ஆஸ்திரேலிய மண்ணில் மணம் பரப்பிக் கொண்டுள்ள அமைப்பாகும்.* தமிழர் நலன் காக்க ஆஸ்திரேலிய அமைப்புக்களுடன் இணைந்து செயல்படும் அமைப்பாகும்.* தமிழர்களின் கலை மற்றும் பண்பாட்டுத் தேவைகளை அறிந்து அவர்களின் தாயக உணர்வுகளுக்கு உயிரூட்டும் அமைப்பாகும்.
இவ்வமைப்பின் நோக்கங்கள் :
*ஆஸ்திரேலியா வாழ் தமிழர்களுக்கும் ஏனைய அரசாங்கம் மற்றும் தமிழ் அமைப்புகளுக்கும் பாலமாக விளங்குவது.* TACA Sydney மூலம் பல்லின ஆஸ்திரேலியாவின் பலத்தை அதிகரித்து இன நல்லிணக்கத்துக்கு வழி வகுப்பது.* அரசியல் சார்பின்றி, மத சார்பின்றி தமிழ் இனத்தின் மேம்பாட்டுக்கு பாடுபடுவது.* இதன் தன்னார்வ உறுப்பினர்கள் தமிழ் இன மக்களின் நலனைக் குறியாகக் கொண்டு செயல்படுபவர்கள். அவர்களில் ஒத்த கருத்துள்ள தமிழர்கள் இணைந்து தமிழ் மக்களின் மேம்பாட்டுக்காக செயலாற்ற மேடை அமைத்துக் கொடுப்பது.* சமூக, கலாச்சார கல்வி மற்றும் இலவச சேவைகளை வழங்கி தமிழ் மக்களுக்கு சேவையாற்றுதல்.* தமிழ் கல்வி பயிற்றுவிக்க வகை செய்தல்.* தமிழர் திறமைகளை வெளிக் கொண்டு வரும் நிகழ்வுகளை நடத்துதல், கெளரவித்தல்.* தமிழர் நிதியம் ஒன்றை நிறுவி வாடும் தமிழர் தேவைகளை தீர்த்து வைத்தல்.தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் சார்பில் சிட்னியில் சித்திரை திருவிழா, பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. நிர்வாகக் குழு விபரம் (2014-2015) : தலைவர் - அனகன் பாபுதுணைத் தலைவர் - நாராயணன் மாணிக்கவாசகம்செயலாளர் - சித்ரா சத்தியகுமார்துணைச் செயலாளர் - தீபக் கோபால்பொருளாளர் - ஜெய் அருசுணன்பொதுநல தொடர்பாளர் - சுந்தரவடிவேல் மாரிமுத்துஉறுப்பினர்கள் - முத்து ராமச்சந்திரன், சந்திரிகா சுப்ரமணியன், சுந்தர் கிருஷ்ணபிள்ளை, சிவகுமார் சுந்தர்ராஜன்
தொடர்பு மற்றும் விபரங்கள் பெற : அனகன் பாபு (தலைவர்) - +61 402 229 517சித்ரா சத்தியகுமார் (செயலாளர்) - +61 433 493 348www.tacasydney.org, www.facebook.com/taca.sydney - தினமலர் வாசகர் அனகன் பாபு
ஹாஜிகளின் நலனுக்காக சவூதியில் 129வது இரத்ததான முகாம்....
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.