செய்திகள்

பெங்களூருவில் கிருஷ்ணலீலா நாட்டிய நாடகம்

ஜூன் 17,2016 

 பெங்களூரு : கலார்நவ விழாவின் 10ம் ஆண்டு விழா பெங்களூருவில் உள்ள தயானந்த சாகர் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணலீலாநவ என்னும் தலைப்பில் நாட்டிய நாடகம் நடத்தப்பட்டது. சுமார் 170 நடன கலைஞர்கள், 50 க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்ற இந்த நாட்டிய நாடகத்தில் கிருஷ்ணரின்  பிறப்பு முதல் பாகவதம் வரையின் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்பட்டன். சுமார் 4 மணிநேரம் நடைபெற்ற இந்த நாட்டிய நாடகத்தை அரங்கு நிறைந்த கலா ரசிகர்கள் கண்டு மகிழ்ந்தனர். பரதநாட்டியம், குச்சிப்புடி உள்ளிட்ட 5 விதமான கலாச்சார நடனங்கள் காட்சிகளில் இடம்பெற்றிருந்தது இந்நிகழ்ச்சியின் தனிச்சிறப்பாக அமைந்திருந்தது. பானுமதி மற்றும் ஹீலா சந்திரசேகரின் புஷ்பாஞ்சலியுடன் நிகழ்ச்சி துவங்கியது.  மூத்த கலைஞர்களால் தில்லானா அரங்கேற்றப்பட்டு, நிகழ்ச்சி நிறைவு பெற்றது. மேடை வடிவமைப்பும், கலைஞர்களின் வண்ணமயமாக ஆடை வடிவமைப்பும் அனைவரையும் பெரிதும் கவர்ந்தது.


Advertisement
மேலும் பெங்களூரு செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

நொய்டா கோவிலில் ஸ்ரீ ராமாயண நவாஹ உத்சவம்

நொய்டா கோவிலில் ஸ்ரீ ராமாயண நவாஹ உத்சவம்...

நொய்டா கோவில்களில் விநாயக சதுர்த்தி

நொய்டா கோவில்களில் விநாயக சதுர்த்தி...

நொய்டா கோவிலில் முருகனுக்கு சஷ்டி அபிஷேகம்

நொய்டா கோவிலில் முருகனுக்கு சஷ்டி அபிஷேகம்...

நொய்டா கோவில்களில் ஸ்ரீ மகா சங்கட ஹர சதுர்த்தி

நொய்டா கோவில்களில் ஸ்ரீ மகா சங்கட ஹர சதுர்த்தி...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us