செய்திகள்

கொல்கத்தா பாரதி தமிழ்ச்சங்க பவள விழா

ஜூலை 12,2016  IST

கொல்கத்தா: கொல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கதத்தின் பவள விழா வேதபவன் தலைவர் எஸ்.மகாலிங்கம் தலைமையில் நடந்தது. கோவை வசந்தவாசல் கவிமன்றத்தினர் இதில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். சங்கத்தலைவர் எஸ்.சம்பத்குறார் வரவேற்றார். தமிழுக்கும் கலை, இசை மற்றும் நாடகத்திற்கு பணியாற்றி வரும் சவுமியநாராயணன், மு.நாராயணசாமி மற்றும் பத்ம ராய் பரதன், தமிழ்சார்ந்த அமைப்புகளான கல்கத்தா சவுத் இந்திய கிளப், எக்ஸில்யர்ஸ் கிளப், என்ஆர்.ஐயர் நினைவு கல்வி அமைப்பு, ஆர்ஆர்.சபா, சாஸ்தா மன்றம், உதயபவன் மற்றும் வேதபவன் ஆகியவர்களுக்கு பவளவிழா நினைவு சின்னம் வழங்கப்பட்டது.


பானுமதி மொழியாக்கம் செய்த சரத் சந்திரரின் சிறுகதைத் தொகுப்பை எஸ்.மகாலிங்கம் வெளியிட, சங்கத்தலைவர் சம்பத்குமாரும், கோவை வசந்தவாசல் கவிமன்றத் தலைவர் கோவை முகிலனும் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து முயன்றால் முடியும் என்ற தலைப்பிலான கவியரங்கில், க.சிவராசு, நித்யானந்தபாரதி, மு.பிரகஸ்பதி, பொன்.கனகாசலம், முருகேசன், வீ.ரூப்ஸ், க.வேலுச்சாமி, அன்பு, பா.சுகுமார், இரா.சண்முகள், மு.பெ.ராமலிங்கம், ம.நா.சிவஞானம், தினகரன் ஆகியோர் கவிதை வடித்தனர். செயலாளர் சித்ரா சிவராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.


இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், சங்கத் துணைத்தலைவர் இரா.நக்கீரர் வரவேற்க, பாரதீய வித்யா பவன் நிர்வாக இயக்குநர் ஜி.வி.சுப்ரமணியன் தலைமை ஏற்றார். தொடர்நது கோவை முகிலன் தலைமையில் மு.பெ.இராமலிங்கம், வி.ரூப்ஸ், தரைப்படங்களின் தாக்கம் இளைய சமுதாயத்தை பண்படுத்துகிறது; பாழ்படுத்துகிறது என்ற தலைப்பில் வாதாடினர். பாரதி தமிழ்ச்சங்க மு்னானள் தலைவர் சி.பி.நாராயணன், தற்போதைய தலைவர் எஸ்.சம்பத்குமார், துணைத்தலைவர் இரா.நக்கீரர், செயலாளர் சித்ரா சிவராமகிருஷ்ணன், உதடிச் செயலாளர் கு.வெங்கடேசன், பொருளாளர் எஸ்.ஜெயராமன், செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.வெங்கடேசன், கோ.இராஜேந்திரன், புகழேந்திரன், நூலகர் எம்.புவனேஸ்வரி, ஊழியர் சநாதன் சாகு ஆகியோருக்கு பவளவிழா நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. உதவிச் செயலாளர் கு.வெங்கடேசன் நன்றி கூறினார்.


மாலையில் தலைவர் எஸ்.சம்பத்குமார் வரவேற்க, கொல்கத்தா துறைமுக கழக துணைத் தலைவர் எஸ்.பாலாஜி தலைமை ஏற்றார். தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில், முருகேசன், தினகரன், மு.பிரகஸ்பதி, ம.நா.சிவஞானம் பேசினர். ம.நா.சிவஞானம் நடத்திய, தமிழ் பேச்சு தவறினால் போச்சு என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற கொல்கத்தாவாழ் மக்கள் 15 பேருக்கு, கோவை வசந்தவாசல் கவிமன்ற விருதும் சான்றிதழும் வழங்கப்பட்டன. மு.பெ.இராமலிங்கம், மேஜிக் ஷோ நடத்தினார். இரண்டு நாள் நிகழ்வுகளையும் தொகுத்து வழங்கி செயலாளர் சித்ரா சிவராமகிருஷ்ணன், நிறைவாக நன்றி கூறினார்.


- தினமலர் வாசகர் ஆர்.நக்கீரர் 


Advertisement
மேலும் கோல்கட்டா செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

நொய்டா ஶ்ரீ கார்த்திகேயன் கோயிலில் பங்குனி உத்திரம்

நொய்டா ஶ்ரீ கார்த்திகேயன் கோயிலில் பங்குனி உத்திரம் ...

மும்பையில் இந்தியப் பேனாநண்பர் பேரவையின் 25 வது ஆண்டு துவக்க விழா

மும்பையில் இந்தியப் பேனாநண்பர் பேரவையின் 25 வது ஆண்டு துவக்க விழா...

அர்-ரஹ்மான் ஹஜ் சேவை (மும்பை) கிளையின் சார்பாக காஸ் விழிப்புணர்வு முகாம்

அர்-ரஹ்மான் ஹஜ் சேவை (மும்பை) கிளையின் சார்பாக காஸ் விழிப்புணர்வு முகாம்...

நொய்டாவில் சம்பிரதாய பஜனை

நொய்டாவில் சம்பிரதாய பஜனை...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us