நொய்டா : நொய்டா ஸ்ரீ விநாயகர் மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா ஆலயம் திறக்கப்பட்ட பிறகு கடந்த 48 நாட்களாக நடைபெற்று வந்த மண்டலாபிஷேகம் ஜூன் 8 ம் தேதியுடன் நிறைவடைந்தது. மண்டலாபிஷேகத்தில் நாள்தோறும் வேத மந்திரங்கள் முழங்க, ஸ்ரீ விநாயகர் மற்றும் ஸ்ரீ கார்த்திகேயருக்கு மகா அபிஷேகம் நடத்தப்பட்டு, சுப்ரமணிய ஹோமம் நடத்தப்பட்டது. மகா தீபாராதனை மற்றும் பக்தர்களுக்கு மகாபிரசாத விநியோகத்துடன் நிறைவடைந்தது. இந்த மண்டலாபிஷேக விழாவில் நொய்டா மட்டுமின்றி டில்லியை சுற்றியுள்ள பகுதிகள், இந்திராபுரம், வைஷாலி, காசியாபாத் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வேத பிரசார் சன்ஸ்தான் அமைப்பால் நிர்வாகிக்கப்பட்டு வரும் இக்கோயில் ஏப்ரல் 22 ம் தேதி அன்று திறக்கப்பட்டது. நாள்தோறும் ஏராளமான மக்கள் இக்கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஏப்ரல் 29 முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் குழுக்களாக வந்து காலையில் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்தனர்.
- தினமலர் செய்தியாளர் வெங்கடேஷ்
புதுடில்லி ஹயக்ரீவா சார்பில் சேரன்மாதேவி பள்ளியில் குடியரசு தின விழா...
டில்லி செந்தமிழ் பேரவை சார்பில் குடியரசு தின விழா...
மனதைக் கொள்ளை கொண்ட 'கொஞ்சும் சலங்கை'; அன்பாலயத்திற்கு அன்பான காணிக்கை ...
பிப்ரவரி 22,2019 IST
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.