செய்திகள்

அகமதாபாத்தில் காஞ்சி மகாபெரியவா ஜெயந்தி உற்சவம்

ஜூன் 10,2018  IST
நடமாடும் தெய்வமாய் நம்மிடை நூறாண்டு வாழ்ந்த மகான் கா ஞ்சி மகான் என்று அழைக்கப்படும் ஸ்ரீ சந்திர சேகர சரஸ்வதி ஸ்வாமிகள் .காஞ்சி மடத்தில் 68 வது மடாதிபதியாக தனது 13 ம் வயதில் பட்டத்திற்கு வந்தவர்.தாம் வாழ்ந்த காலத்தில் எண்ணற்ற அறப்பணிகள் செய்து மக்களை அறவழியில் வாழ வழிகாட்டியவர்.அவரது 125 வது ஜெயந்தி விழா உலகமெங்கும் வைகாசி அனுஷம் அன்று கொண்டாடப்பட்டது.

இருபதாம் நூற்றாண்டின் பெரும் பகுதி அவர் பூத உடலுடன் பாரதமெங்கும் கால்நடையாய் பயணித்து, தர்ம சாஸ்த்ரத்தை மக்கள் உணர்ந்து அதன் வழி வாழ வழிவகுத்தவர்.


அகமதாபாத் ஆதி சங்கர கோவிலில் பெரியவா ஜெயந்தி சாஸ்திர முறைப்படி நடைபெற்றது. சங்கல்பத்துடன் கலச ஆவாகனம் செய்து ஸ்ரீ ருத்ர ஹோமமும் துர்கா ஷுக்த ஹோமமும் வேத விற்பனர்கள் முறைப்படி செய்தார்கள்.பக்தர்கள் விஷ்ணு சஹஸ்ரநாமம் ஜபிக்க ஆதி சங்கரர் விக்ரகத்திற்கு அபிஷேகம் நடைபெற்றது. காஞ்சி பெரியவரின் பாடல்களை பக்தி பாவத்துடன் அன்பர்கள் பாடினார்கள் .தொடர்ந்து ஸ்ரீ சந்திர சேகர அஷ்டோத்திர அர்ச்சனை -மகாநெய்வேத்தியம்- தீபாராதனை செய்விக்கப்பட்டது.இதை அடுத்து டில்லி மீனா வெங்கி  குரு மகிமை என்ற தலைப்பில் உபன்யாசம் தொடர்ந்தது.

வேதபண்டிதர்களுக்கும் .உபன்யாசம் செய்த மீனா வெங்கிக்கும் மடத்தின் சார்பில் பிரசாதம் வழங்கி கௌரவிக் கப்பட்டர்கள்.வந்திருந்த அனைவருக்கும் மகாப்ரசாதம் வழங்கப்பட்டது.ஜெயந்தி மகோத்சவ ஏற்பாடுகளை பாலாஜி  தலைமையில் அகமதாபாத் அன்பர்கள் சிறப்பாக செய்திருந்தார்கள்.

- தினமலர் வாசகி மீனா வெங்கி
--


 

Advertisement
மேலும் பிற மாநிலங்கள் செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

டில்லியில் ராமமூர்த்தி பாகவதர் நினைவு கலைவிழா

டில்லியில் ராமமூர்த்தி பாகவதர் நினைவு கலைவிழா...

டில்லியில் பவானியின் பிரசனாலயா ஆண்டு விழா

டில்லியில் பவானியின் பிரசனாலயா ஆண்டு விழா ...

டில்லியில் சமாதிருஷ்டி நிகழ்ச்சி

டில்லியில் சமாதிருஷ்டி நிகழ்ச்சி ...

வர்ணம்- பாட்டுப்போட்டி விருதுகள் வழங்கு விழா

வர்ணம்- பாட்டுப்போட்டி விருதுகள் வழங்கு விழா...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us