செய்திகள்

நொய்டாவில் விநாயகர் சதுர்த்தி விழா

ஆகஸ்ட் 23,2018  IST

 நொய்டா : நொய்டா ஸ்ரீ விநாயகர் மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. விநாககர் சதுர்த்தி அன்று காலை விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், சகஸ்ரநாம அர்ச்சனை, காதீபாராதனை மற்றும் அனைவருக்கும் பிரசாத விநியோகம் செய்யப்பட உள்ளது. அன்று மாலை விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற உள்ளது. செப்டம்பர் 16 அன்று சவுமிய குருசரண் குழுவினரின் கர்நாடக இசைக்கச்சேரியும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 16 ம் தேதி காலை 500 க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


புதிதாக திறக்கப்பட்டுள்ள இக்கோயிலில் இந்த ஆண்டு செப்டம்பர் 13 ம் தேதி முதல் முறையாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. விநாயகர் சதுர்த்திக்கு முன் இக்கோயிலின் விரிவாக்க பணிகளை நிறைவு செய்ய கோயில் நிர்வாகக் குழுவினர் முடிவு செய்துள்ளனர். 



இதே பகுதியில் 1987 முதல் இயங்கி வரும் வரசித்தி விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கணபதி ஹோமம், ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், தினசரி சகஸ்ரநாம அர்ச்சனை, லட்சார்ச்சனை, , அபிஷேகங்கள் உள்ளிட்ட பலவும் நடத்தப்பட உள்ளன. காலையிலும், மாலையிலும் கணேச உற்சவரின் ஊர்வலமும், கலாச்சார நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. 


- தினமலர் செய்தியாளர் வெங்கடேஷ்

Advertisement
மேலும் பிற மாநிலங்கள் செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

டில்லியில் புரந்தரதாசர், தியாகராஜர் இசை விழா

டில்லியில் புரந்தரதாசர், தியாகராஜர் இசை விழா ...

புதுடில்லி ஹயக்ரீவா சார்பில் சேரன்மாதேவி பள்ளியில் குடியரசு தின விழா

புதுடில்லி ஹயக்ரீவா சார்பில் சேரன்மாதேவி பள்ளியில் குடியரசு தின விழா...

தமிழர் நலக் கழகத்தின் 23ஆம் வருட பொங்கல் விழா

தமிழர் நலக் கழகத்தின் 23ஆம் வருட பொங்கல் விழா...

டில்லி செந்தமிழ் பேரவை சார்பில் குடியரசு தின விழா

டில்லி செந்தமிழ் பேரவை சார்பில் குடியரசு தின விழா...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us