செய்திகள்

ஐதராபாத்தில் தமிழர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள்

ஆகஸ்ட் 31,2018  IST

ஐதராபாத் மாநகர்த் தமிழ்ச் சங்கம் சார்பில் ஐதராபாத் ஹைடெக் சிட்டியில் உள்ள பீனிக்ஸ் அரினாவில் பல்சுவை கண்கவர் கலை நிகழ்ச்சிகள் மிகுந்த மகிழ்ச்சியுடனும் உற்சாகத்தோடும் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. கலைநிகழ்ச்சிகள் தமிழ்த் தாய் வாழ்த்துடன் மாலை 6 மணியளவில் தொடங்கியது, தமிழ்ச் சங்கத்தின் மூத்த மற்றும் புதிய உறுப்பினர்களும் குத்துவிளக்கேற்ற நிகழ்ச்சிகள் இனிதே தொடங்கியது.
பொதுச் செயலாளர் கிருபானந்தம் வரவேற்றார், விழாவின் முதல் நிகழ்ச்சியாக நம் தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக பரதநாட்டியமும் தொடர்ந்து குழந்தைச் செல்வங்களின் திருக்குறள், ஆத்திச்சூடி ஒப்புவித்தல், பாரதியார் கவிதைகள் மற்றும் பாடல்களைப்பாடி அனைவரின் பாராட்டுக்களைப் பெற்றனர். மழலையர் நிகழ்ச்சி மனம் கவரும் வண்ணம் அமைந்திருந்தது. 


இளைஞர்களின் நகைச்சுவை மற்றும் பலக்குரல் நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தது. பின்னர் திரைப்பட பாடல்கள் நடனம், குச்சிப்புடி நடனம் என அரங்கம் அதிர செய்தனர். இளைஞர்களின் தமிழிசை கிராமிய நடனம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. விழாவில் கலந்துகொண்டு அனைவருக்கும் சென்னை கபே சார்பில் சூடான தேனீருடன் சுவையான தின்பண்டங்கள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து கீ போர்டு, டிரம்ஸ் இசையால் நம்மை எல்லாம் அதிரச் செய்தனர் நம் இளைய தலைமுறையினர். நாங்களும் இளைஞர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என பழைய திரையிசை, தமிழிசை கிராமியப் பாடல்கள், கவிதை மற்றம் பாரதியின் பாடல்கள் பாடி அசத்தினார்கள் பெண்கள் மற்றும் பெரியவர்கள். இந்த அருமையாக பல்சுவை கலை நிகழ்ச்சியில் சுமார் 4 வயது முதல் 65 வயது வரை பங்கேற்ற கலைஞர்கள் அனைவரும் தங்களின் தனித் திறமைகளை மிகவும் அருமையாக உற்சாகத்தோடு வெளிப்படுத்தினர்.
பின்னர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்கள் அனைவருக்கும் கிருபானந்தம் மற்றும் தி ஹான்ஸ் இந்தியா நாளிதழின் ஆசிரியர் நரேஷ் குமார் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். இந்த கலைநிகழ்ச்சிகள் அனைத்தும் சீரும் சிறப்புடன் நடைபெற அயராது உழைத்த கு.ராஜ்குமார், சரவணன் மற்றும் நிகழ்வில் களப்பணியாற்றிய தமிழ்ச் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்யப்பட்டது.
மேலும் மழையும் பொருட்படுத்தாமல் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொண்ட கலைஞர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் பார்வையாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. 


Advertisement
மேலும் பிற மாநிலங்கள் செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

மும்பையில் இந்தியப் பேனாநண்பர் பேரவையின் 25 வது ஆண்டு துவக்க விழா

மும்பையில் இந்தியப் பேனாநண்பர் பேரவையின் 25 வது ஆண்டு துவக்க விழா...

அர்-ரஹ்மான் ஹஜ் சேவை (மும்பை) கிளையின் சார்பாக காஸ் விழிப்புணர்வு முகாம்

அர்-ரஹ்மான் ஹஜ் சேவை (மும்பை) கிளையின் சார்பாக காஸ் விழிப்புணர்வு முகாம்...

மார்ச் 23, 24ம் தேதி தில்லி ரோகிணியில் 18வது வருட ராதா கல்யாண மகோத்ச்வம்

மார்ச் 23, 24ம் தேதி தில்லி ரோகிணியில் 18வது வருட ராதா கல்யாண மகோத்ச்வம்...

டில்லியில் புரந்தரதாசர், தியாகராஜர் இசை விழா

டில்லியில் புரந்தரதாசர், தியாகராஜர் இசை விழா ...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us