செய்திகள்

டில்லியில் ராமமூர்த்தி பாகவதர் நினைவு கலைவிழா

டிசம்பர் 28,2018  IST

 புதுடில்லி : மறைந்த தஞ்சாவூர் ஸ்ரீ .ஜி ராமமூர்த்தி பாகவதர் ஹரிகதா வித்வத்வம் பெற்று  தமிழகத்தில் பெரும் புகழோடு வாழ்ந்த கலைஞர்.இத்துறையில் தமிழக அரசின் கலைமாமணி  விருது பெற்ற முதல் கலைஞர்.பாரம்பரியம் மிக்க இசை குடும்பத்தில் நான்காவது தலைமுறை கலைஞர்.சிவாஜியின் காலத்தில் தஞ்சாவூரில் மராட்டியர்கள் ஆட்சி செய்தபோது இந்த கலை வளரத்தொடங்கியது.இன்று  சிறுவர்கள் முதல் பெரியவர் வரை மிகவும் அனுபவிக்கும் இந்த இசை வழி கதை சொல்லும் பாணி காலத்திற்கேற்ப பல மாற்றங்களை கொண்டு வளர்ந்து வந்துள்ளது .




ஸ்ரீ வெங்கடசலபதி பாகவதர் வழி வந்த தஞ்சாவூர் கேசவன் டில்லியில் தனது தந்தை ராமமூர்த்தி பாகவதர் நினைவாக இந்த கலைவிழாவை டில்லி தமிழ் சங்க வளாகத்தில் நடத்தினார்.இவரது லயத்வனி அமைப்புடன் டில்லி என்.ஐ.ஐ.சி.டி நீரஜா சர்மாவும் இணைந்து இந்த விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். மாயாமாதவம் என்ற தலைப்பில் நான்கு நாள் பரத நாட்டிய பயிலரங்கம் நடைபெற்றது. பெங்களுரு பரத  கலைஞர்  பார்சவனாத் உபாத்யாய்,டில்லி ஹிமான்ஷு ஸ்ரீவத்சவா இருவரும் - இந்த பயிலரங்கத்தில் ஆரம்ப கட்ட பாடத்தில் தொடங்கி ,அடுத்த நிலையில் மனோதர்மம்,புதிய கருத்துகளை தெரிவிக்கும் முறைகள்,பாரம்பரிய நடன குறிப்புக்கள்,அபிநயங்கள் என பழைமை மாறாது புதுமையை ஏற்கும் படி நடனத்தை அமைப்பது பற்றி மேல்நிலை மாணவர்களுக்கு புரியவைத்தார்கள்.



நான்கு நாள் பயிலரங்கத்திற்கு பிறகு நிறைவுநாளில் பயிலரங்க மாணவர்கள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பத்மவிபூஷன் பிஜு மகாராஜ் .யாமினி கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டது சிறப்பு.பிஜூ மகாராஜ் அமர்ந்தபடியே நடன அசைவுகளை காட்டி தான் ஒரு தேர்ந்த கலைஞன் என்பதை நிரூபித்தார் .பயிலரங்க மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.




- நமது செய்தியாளர் மீனா வெங்கி


Advertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

நொய்டாவில் திருவையாறு

நொய்டாவில் திருவையாறு...

மணிப்பூர் தமிழ்ச்சங்க புதிய கட்டிட திறப்பு விழா

மணிப்பூர் தமிழ்ச்சங்க புதிய கட்டிட திறப்பு விழா...

நொய்டா கோயிலில் 9ஆவது மார்கழி உற்சவம்

நொய்டா கோயிலில் 9ஆவது மார்கழி உற்சவம்...

கோட்டயத்தில் பொங்கல் விழா

கோட்டயத்தில் பொங்கல் விழா...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us