செய்திகள்

டில்லி மாநகர் காருண்ய மகாகணபதி கோவிலில் தைபூசம்

ஜனவரி 26,2019  IST

தை மாதத்தில் பூச நட்சத்திரமும், முழுநிலவு நாளும் கூடி வரும் நன்னாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழா தைப்பூச திருவிழாவாகும். தைப் பூசம் உலகமெங்கும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது .
டில்லி மாநகர் மயூர்விஹார் -2 காருண்ய மகாகணபதி கோவிலில் தைபூசம் பக்தர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இங்குள்ள குளிரையும் மீறி இறையுணர்வுடன் பல பகுதி அன்பர்கள் ஒன்று சேர்ந்து திருபுகழ் பாடியது அருமை.முன்னதாக முருகன் வள்ளி தேவயானைக்கு அபிசேகம் ஆராதனை நடைபெற்றது.பின்னர் இசை வழி பாடு திருப்புகழ் அன்பர்கள் ஜிக்கிமாமா தலைமையில் சசி,கிரிஜாவை பின்பற்றி பாடினார்கள்.மங்கள தீப ஜோதியில் கந்தன் ஒளிர்ந்த அழகே அழகு.வருடா வருடம் தைபூசவைபவத்தை கோவில் முன்னாள் தலைவர் மகாலிங்கம் அவரது குடும்பத்தினர் பொறுப்பேற்று செய்துவருகின்றனர். இந்நாள் பற்றி நாம் தெரிந்து கொள்ளவேண்டியசில குறிப்புகள்.


அடியார்கள் காவடி எடுத்தல், கற்பூரச்சட்டி போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவார்கள். இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.
தைமாதம் உத்தராயண காலத்தின் ஆரம்பம். உத்தராயணம் என்பது தேவர்களின் பகல் பொழுது என்பதால் தை மாதம் அவர்களின் காலைப் பொழுதாகும். பௌர்னமி தினத்தில்; சிவாம்சமான சூரியன் மகர ராசியில் இருக்க, சக்தி அம்சமான சந்திரன் கடகராசியில் (பூசம் நட்சத்திரம்) ஆட்சி பெற்றிருக்க சூரிய சந்திரர்கள் பூமிக்கு இருபுறமும் நேர்கோட்டில் நிற்க 'தைப்பூச திருநாள்' அமைகின்றது.
தைப்பூச திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்' என்பது பழமொழியாக அமைவதால்; அன்றைய தினம் குழந்தைகளுக்கு காது குத்துதல், வித்யாரம்பம் எனப்படும் கல்வி தொடக்குதல் திருமணப் பேச்சுக்கள் ஆரம்பித்தல், ஒப்பந்தங்கள் செய்தல் போன்ற நற்செயல்கள் மேற் கொள்ளப்பெறுகின்றன. இத் தைபூசத்திருநாளிலே தொடங்கும் செயல்கள் தொய்வின்றி இனிதே நிறைவேறும் என்பது காலம் காலமாக நாம் கொண்டுள்ள நம்பிக்கையாகும். தைப்பூச நன்னாளானது உலக சிருஷ்டியின் ஆரம்ப நாளாகவும் கொள்ளப்படுகின்றது. சிவசக்தி ஜக்கியம் இந்நாளிலேயே நிகழ்ந்ததாகவும் ஐதீகம்.
சிவனும் சக்தியும் இணைந்ததாலேயே உலகம் சிருஷ்டிக்கப்பட்டு இயக்கம் நிகழ்ந்தது என்பது பொருளாக அமைகின்றது. சிவசக்தி இணைந்த இப்புண்ணிய தினத்தில் முதலில் உருவாகியது நீரென்றும், அதன் பின் தொடர்ந்து நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம்ஆகியவை உருவாகின என்றும் நம்பிக்கை கொள்கின்றோம். எனவே உலக இயக்கத்திற்கு ஆதாரமாக அவசியமாகவுள்ள பஞ்சபூதங்களும் சிருஷ்டிக்கப்பட்ட, வழிகோலிய புனிதமிகு நன்னாளாக இத் தைப்பூச தினத்தைப் போற்றி வழிபாடு செய்கின்றோம்
பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால், தைப் பூசத்தன்று குரு வழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும்.

தேவர்களின் குருவாகக்கொள்ளப்படும் பிரகஷ்பதி (குரு பகவான்) பூச நட்சத்திரத்தின் தேவதையாகக் கொள்ளப்படுகின்றார். இவர் அறிவின் தேவதையாகவும் போற்றப்படுகின்றார். பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய முனிவர்கள் இருவருக்கும் சிவபிரானாகிய நடராசப்பெருமான் சிவதாண்டமாடிக் காணுப்படி செய்தநாளாகவும் தைப்பூசம் விளங்குகின்றது. அத்துடன் வாயுபகவானும், வர்ணபகவானும், அக்கினி பகவானும் சிவபிரானின் அதீத சக்தியை உணர்ந்த நாளாகவும் இந்நாள் போற்றப்படுகின்றது. அதாவது இயற்கையை கட்டுப்படுத்தும் சக்தியாக இறைவனே உள்ளமை உணர்த்தப்பட்ட புண்ணியநாள் இத் தைப்பூச நன்னாளாகும்.
- நமது செய்தியாளர் மீனா வெங்கி


Advertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

நொய்டாவில் திருவையாறு

நொய்டாவில் திருவையாறு...

மணிப்பூர் தமிழ்ச்சங்க புதிய கட்டிட திறப்பு விழா

மணிப்பூர் தமிழ்ச்சங்க புதிய கட்டிட திறப்பு விழா...

நொய்டா கோயிலில் 9ஆவது மார்கழி உற்சவம்

நொய்டா கோயிலில் 9ஆவது மார்கழி உற்சவம்...

கோட்டயத்தில் பொங்கல் விழா

கோட்டயத்தில் பொங்கல் விழா...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us