செய்திகள்

மணிப்பூர் தமிழ்ச்சங்க புதிய கட்டிட திறப்பு விழா

ஜனவரி 26,2019  IST

 மோரே : மணிப்பூர் மாநிலம், மோரே நகரில் தமிழ்ச் சங்கத்தின் புதிய கட்டிடம் திறப்பு விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. சங்கத் தலைவர் வி. சேகர் தலைமையில் மாநில சபாநாயகர்  ஒய். கெம்சந்த் சிங் பதிய தமிழ்ச் சங்க கட்டிடத்தை திறந்து வைத்தார்.         




மாநில  காடுகள் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஷியாம்குமார் சிங், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக  அயலநாட்டுத் தமிழ்க் கல்வித்துறை தலைவர் பேரா.முனைவர் இரா. குறிஞ்சிவேந்தன், மும்பை இந்தியப் பேனா நண்பர் பேரவை தலைவர் மா. கருண், குவாஹாட்டி தமிழ்ச் சங்க பொதுச்செயலாளர் சு. பாண்டிதுரை, டில்லி கலை இலக்கியப் பேரவை தலைவர் பி. குமார், நாகலாந்து தமிழ்ச் சங்க செயலாளர் ஜி. கண்ணன் மற்றும் மோரே தமிழ்ச் சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். 



   




தஞ்சாவூர் தமிழ்த்தாய் அறக்கட்டளை வழங்கிய திருவள்ளுவர் சிலைக்கு அனைவரும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தமிழ்ச் சங்க வளாகத்தின் அருகில் பிரமாண்டமாக அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ அங்காள பரமேஷ்வரி - ஶ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் முதலாம் ஆண்டு வருஷாபிஷேகம் விழாவிலும் பங்கேற்றனர். தொடர்ந்து நடைபெற்ற விழாவில்  முனைவர் குறிஞ்சிவேந்தன், மா.கருண், பி. குமார் வாழ்த்துரை வழங்கினர். பொங்கல் விழாவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சபாநாயகர், அமைச்சர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கினர். 






மோரே தமிழ்ச் சங்கத்தின் துவக்கம், வளர்ச்சி மற்றும் தமிழ் மக்களுக்கு ஆற்றிவரும் பணிகள் குறித்த விளக்கமான செய்திகளை தலைவர் வி. சேகர் எடுத்துரைத்தார். சங்க நிர்வாகிகள் தில்லாகான்,  சுப்ரமணியன் மற்றும் அனைவரும் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.


Advertisement
மேலும் பிற மாநிலங்கள் செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

புதுடில்லி ஹயக்ரீவா சார்பில் சேரன்மாதேவி பள்ளியில் குடியரசு தின விழா

புதுடில்லி ஹயக்ரீவா சார்பில் சேரன்மாதேவி பள்ளியில் குடியரசு தின விழா...

தமிழர் நலக் கழகத்தின் 23ஆம் வருட பொங்கல் விழா

தமிழர் நலக் கழகத்தின் 23ஆம் வருட பொங்கல் விழா...

டில்லி செந்தமிழ் பேரவை சார்பில் குடியரசு தின விழா

டில்லி செந்தமிழ் பேரவை சார்பில் குடியரசு தின விழா...

டில்லி மாநகர் காருண்ய மகாகணபதி கோவிலில் தைபூசம்

டில்லி மாநகர் காருண்ய மகாகணபதி கோவிலில் தைபூசம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us