புதுடில்லி: டில்லி மயூர் விஹார் பேஸ்-3, செந்தமிழ் பேரவை சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. பேரவை தலைவர் எம்.ரமேஷ் தலைமை வகிக்க, செயலாளர் ஏ.மாரி முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக எஸ்.விஸ்வேஸ்வரன், ஆ.பிரமநாயகம் பங்கேற்று, தேசிய கொடி ஏற்றினர். வண்ணம் தீட்டுதல், வரைபடம் வரைதல் போட்டிகள் குழந்தைகளுக்கு நடத்தப்பட்டன.
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பும் பரிசுகளும் வழங்கப்பட்டன. இணைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி வரவேற்று, விழாவைத் தொகுத்து வழங்கினார்.
விழா ஏற்பாடுகளை துணைத்தலைவர்கள் ஏ.எல்.கணேஷ்குமார், பி.முத்துரமேஷ், பொருளாளர் ஏ.எம்.ஆறுமுகம், துணைப்பொருளாளர் வி.சுப்ரமணியன், எஸ்.சரவணன், செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.அன்பு பாண்டியன், பி.சுபாஷ், கே.தர்ஷன், ஏ.கோகுலகிருஷ்ணன், சிவகுமார், ஆலோசகர்கள் ஆர்.கண்ணன், பி.சாய்நாதன் செய்திருந்தனர்.
- நமது செய்தியாளர் மீனா வெங்கி
சிகாகோ தமிழ்ச் சங்க பொன்விழா ஆண்டு பொங்கல் விழா ...
பிப்ரவரி 18,2019 IST
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.