செய்திகள்

நொய்டாவில் திருவையாறு

பிப்ரவரி 02,2019  IST

 நெய்டா : நொய்டா ஸ்ரீ விநாயகா் - ஸ்ரீ கார்த்திகேயா ஆலயத்தில் ஜனவரி 27 ம் தேதியன்று ஸ்ரீ தியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்தும் விதமாக, 'நொய்டாவில் திருவையாறு' என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.  இக்கோயிலில் முதல் முறையாக தியாகராஜ ஆராதனை இந்த ஆண்டு நடத்தப்பட்டது தனிச்சிறப்பாகும். காலை 9 மணிக்கு கணபதி பூஜையுடன் துவங்கிய விழாவில், 20 குழந்தைகள் தியாகராஜக கீர்த்தனைகளை பாடினர். டாக்டர் கே.வகீஷ் தலைமையிலான குழுவினர் ஸ்ரீ தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனைகளை இசைத்தனர். டில்லி ஆர்.ஸ்ரீதர் வயலின், வி.ஷங்கர் ராமன் மிருதங்கம், எம்.ஸ்ரீராம் கடம், டி.சுந்தரம் கஞ்சிரா ஆகியன நிகழ்ச்சிக்கு கூடுதல் சுவை சேர்ப்பதாக அமைந்தது. இந்நிகழ்ச்சியில் நொய்டா மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தில் உள்ள வைஷாலி, இந்திரபுரம், காசியாபாத், டில்லி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். டில்லி ராமகிருஷ்ணாபுரம் தென்னிந்திய சமூகத்தினர், நொய்டா வேத பிரசார் சன்ஸ்தான் ஆகிய அமைப்புக்கள் கோயில் நிர்வாகத்துடன் இணைந்து இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.



டில்லி ஐகோர் ஓய்வுபெற்ற நீதிபதியும், ஸ்ரீ சுவாமிநாத சேவா சமாஜ் அமைப்பின் தலைவருமான நீதிபதி கே.ராமமூர்த்தி இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்கள் அனைவரையும் கவுரவித்தார். தியாகராஜ கீர்த்தனைகள் பாடிய அனைத்து குழந்தைகளுக்கும் சான்றிதழ்களை டாக்டர்.கே.வகீஷ் வழங்கினார். ஒவ்வொரு பஞ்சரத்ன கீர்த்தனையின் முடிவிலும் தியாகராஜருக்கு தீபாராதனை காட்டப்பட்டது. திருவையாரில் நடைபெறுவதைப் போன்றே அனைத்து முறைகளும் நடத்தப்பட்டது. சிறப்பாக அலங்கரிப்பட்ட தியாகராஜர் மற்றும் ராமர் பட்டாபிஷேக படங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. மகா தீபாராதனையுடன் நிறைவடைந்த இவ்விழாவில் இசை ஆர்வலர்கள் அனைவருக்கும் மகா பிரசாதம் வழங்கப்பட்டது.   




வேத பிரசார சமஸ்தானின் தலைவர் சந்திரசேகர் அனைவரையும் வரவேற்றார். ராமகிருஷ்ணாபுரம் தென்னிந்திய சமூக அமைப்பின் தலைவர் வாசன் நிகழ்ச்சிகளை தொகுதஅது வழங்கினார். உரத்துறை அமைச்சக இயக்குனர் வெங்கடேஷ், தேசிய பார்வைதிறன் அற்றோர் கழக நிர்வாக இயக்குனர் சஞ்சீவி, கோல் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நாராயணன் உள்ளிட்டோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.




- நமது செய்தியாளர் வெங்கடேஷ்


Advertisement
மேலும் பிற மாநிலங்கள் செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

புதுடில்லியில் வரம் தரும் வரலட்சுமி பூஜை

புதுடில்லியில் வரம் தரும் வரலட்சுமி பூஜை...

மாபெரும் இரத்த தான முகாம்

மாபெரும் இரத்த தான முகாம்...

புது தில்லி, ரோஹிணி ஸ்ரீ ஜயப்பன் திருக்கோயிலில் ஆவணி அவிட்டம்

புது தில்லி, ரோஹிணி ஸ்ரீ ஜயப்பன் திருக்கோயிலில் ஆவணி அவிட்டம் ...

திவ்யாவின் திவ்யமான தமிழ் இசை

திவ்யாவின் திவ்யமான தமிழ் இசை...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us