தில்லி மயூர்விஹார் பேஸ்-3 ல் தமிழர்நலக்கழகம் 23 ஆம் வருட பொங்கல்விழாவினை சிறப்பாக கொண்டாடியது . காலை 7.30க்கு பாரம்பரிய நாதஸ்வர இசையோடு பொங்கல்வழிபாட்டுடன் துவங்கிய விழா இரவு 9.30 வஅரை நடைபெற்றது. விழாவில் கோலப்போட்டி, இசைநாற்காலி, ஓவியப் போட்டி, வினாடிவினா, நடனப் போட்டி பாட்டுப்போட்டி, ஓட்டப்பந்தயம், இறகுபந்து சதுரங்கம் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் மற்றும் சிறார்கள் உற்சாகமாக கலந்து கொண்டார்கள்.
விழாவில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் திரு வி.சேகர் அவர்கள் தலமையேற்க, மத்திய வெளியுறவுத்துறையின் தூதரகம் மற்றும் கடவுச்சீட்டு மற்றும் விசா துறையின் இயக்குனர் ஏ.நடராஜன் அவர்கள், சிறப்புரையாற்றி போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி கெளரவித்தார்கள். தமிழர் நலக்கழகம் நடத்தும் தமிழ் பட்டறையில் பயின்று தமிழ் நாடு அரசு அங்கீரம் பெற்ற சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியருக்கு சிறப்பு விருந்தினர் கள் திரு இரா. முகுந்தன் தில்லித் தமிழ் சங்க பொதுச் செயலர் அவர்கள், திரு சக்தி பெருமாள், தலைவர் குர்கான் தமிழ்ச்சங்கம் அவர்கள் சான்றிதழ் வழங்கி பாரட்டினார்கள்.
திருமதி நிர்மலா நந்த குமார் அவர்கள் 10ஆம் வகுப்பில் பயிலும் தமிழ் நலக்கழக மாணவர்களுக்கு பயிற்சிப்புத்தங்கள் வழங்கினார்கள். சிறார்கள்பங்குபெற்ற கலைநிகழ்ச்சிகளும் நடந்தது. விழாவில் ,தில்லித் தமிழ்சங்க உபதலைவர் திரு யதார்தா கி பென்னேஸ்வரன், திரு அருணாச்சலம் கொல்கொத்தா பாரதி தமிழ்ச்சங்க முன்னால் தலைவர் திரு ஞான சேகரன் திரு ராமகிருஷ்ணன் ஆதிசங்கர சேவாசமாஜம் அவ்வை தமிழ் சங்க நிர்வாகி டாக்டர் வளவன்,திருமதி சக்தி பெருமாள் திரு ராஜ கோபால் எஸ் கேவி எனர்ஜி சா்வீசஸ் உள்ளிட்ட பலபிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
கழகத்தின் பொதுச் செயலர் திரு சிங்கத்துரை வரப்பேற்புரை நிகழ்தினார் தலைவர் சுப்பையா கழகத்தின் ஆண்டறிக்கை வாசித்தார் திரு பாஸ்கரன் நன்றி நல்கினார். விழாவின் நிகழ்வுகளை திருமதி சுமதி மற்றும்திருமதி பவானி தொகுத்தளித்தார்கள் விழா ஏற்பாட்டை தமிழா் நலக்கழக செயற்குழு உறுப்பினர்கள் திறம்பட செய்திருந்தார்கள்.
- நமது செய்தியாளர் மீனா வெங்கி
-
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.