புதுடில்லி ஹயக்ரீவா, ருக்மணி குழ்ந்தைகள் மற்றும் பெண்கள் நல அறக்கட்டளை, சேரன்மாதேவி கமிட்டி நடுநிலைப்பள்ளி இணைந்து குடியரசு தின விழா மற்றும் விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழாவை நடத்தின.
தலைமை விருந்தினர் காவல் துறை உதவி ஆய்வாளர் சையது நிஷார் அகமது, சுகாதார ஆய்வாளர் முருகன், சுகாதாரத் துறை மேற்பார்வையாளர் ஜான் ஆண்டனி அருள் தாஸ், வட்ட கல்வி அதிகாரி கலைச்செல்வி, தலைமை ஆசிரியர் கோவிந்தராஜன், கமிட்டி செயலாளர் ஜி.சுந்தரபரிபூர்ண ராஜன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.
தேசபக்தி பாடல்களுடன் துவங்கிய குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளில், நாடகம், இசையுடன் கூடிய நடனம் இடம் பெற்றன. தொடர்ந்து விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 148 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ருக்மணி அறக்கட்டளை பி.கோமதி நன்றி கூறினார்.
- நமது செய்தியாளர் மீனா வெங்கி
சிகாகோ தமிழ்ச் சங்க பொன்விழா ஆண்டு பொங்கல் விழா ...
பிப்ரவரி 18,2019 IST
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.