செய்திகள்

ரோஹிணி ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம சத்சங்க 18 வருட ராதா கல்யாண மஹோத்சவம்

மார்ச் 26,2019  IST

புது தில்லி, ரோஹிணி ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம சத்சங்கத்தின் 18 வருட ராதா கல்யாண மஹோத்சவம் பாலகோகுலம் குழுவினரால் மிகச்சிறப்பாக ரோஹிணி செக்டர் 16-ல் மா ஆத்ய சக்திதாம் மந்திரில் மார்ச் 23 மற்றும் 24ம் தேதியில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ரோஹிணி ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம சத் சங்கத்தினர் செய்திருந்தினர்.
23-ம் காலை 6.00 மணிக்கு ஸ்ரீ கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. ருத்ரா அபிஷேகம், ஸ்ரீ மகா பெரியவாளின் பாதுகை பூஜை, ஸ்ரீ விஷ்ணு மற்றும் ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம பாராயணத்தை தொடர்ந்து ப்ரஹ்மஸ்ரீ என். ஹெச். சூடாமணி சுனில் பாகவதர் குழுவினரின் சம்பிரதாய அஷ்டபதி பஜனையுடன் முடிவடைந்தது. மதியம் ஏழைகளுக்கு உணவளிக்கப்பட்டது. மாலை 5.00 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு ஸ்ரீ கண்ணன் ராதா உருவப்படம் மற்றும் ஸ்ரீ மஹா பெரியவா பாதுகை கொண்ட பல்லக்குடன் வீதிவுலா தொடங்கியது. ஏராளமான குழந்தைகள் மற்றும் மங்கையர்கள் பரவசத்துடன் கோலாட்டமாடி தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்கள். தொடர்ந்து திவ்ய நாம சங்கீர்த்தன பஜனை மற்றும் டோலோத்ஸவத்துடன் முதல் நாள் வைபவம் நிறைவுற்றது.


24-ம் காலை 6.00 மணிக்கு ஸ்ரீ விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. ஸ்த்வருத்தி என்னும் உஞ்சவிருத்தி, அதை தொடர்ந்து பகவானுக்கு சீர்கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் பிறகு ஸ்ரீராதா கல்யாண மஹோத்சவம் மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேய உத்சவம் ஆகியன நடைபெற்றன. தொடர்ந்து அன்னதாம் நடைபெற்றது.
ரோகினி ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம சத்சங்கத்தின் சார்பில் “நாமசங்கீர்த்தன பிரச்சாரகா” விருதை சுனில் பாகவதருக்கு வழங்கி கௌரவித்தனர்.
இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஆன்மீக அன்பர்கள் பல இடங்களில் இருந்து வந்து திரளாக கலந்துகொண்டனர்.
- தினமலர் வாசகர் எம். வீ. தியாகராஜன்


Advertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

நொய்டாவில் 24வது ஆண்டு ஸ்ரீ ராம நவமி ஜனனோத்ஸவம்

நொய்டாவில் 24வது ஆண்டு ஸ்ரீ ராம நவமி ஜனனோத்ஸவம்...

நொய்டா ஶ்ரீ விநாயகர் கோயிலில் சீதா கல்யாண மஹோத்சவம்

நொய்டா ஶ்ரீ விநாயகர் கோயிலில் சீதா கல்யாண மஹோத்சவம் ...

நொய்டா ஶ்ரீ கார்த்திகேயன் கோயிலில் பங்குனி உத்திரம்

நொய்டா ஶ்ரீ கார்த்திகேயன் கோயிலில் பங்குனி உத்திரம் ...

மும்பையில் இந்தியப் பேனாநண்பர் பேரவையின் 25 வது ஆண்டு துவக்க விழா

மும்பையில் இந்தியப் பேனாநண்பர் பேரவையின் 25 வது ஆண்டு துவக்க விழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us