செய்திகள்

நொய்டாவில் 24வது ஆண்டு ஸ்ரீ ராம நவமி ஜனனோத்ஸவம்

ஏப்ரல் 14,2019  IST

நொய்டா செக்டர் 34-ல் அமைந்திருக்கும் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம சத்சங்கம் அமைப்பின் சார்பில் நேற்று சனிக்கிழமை நொய்டா ஸ்ரீ ஆதிசங்கரர் மடத்தில் 24ம் ஆண்டு வருட ஸ்ரீ ராம நவமி ஜனனோத்ஸவம் மிக விமர்சையாக நடைப்பெற்றது.
காலை ஸ்ரீ மஹா கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. பிறகு ஸ்ரீ வேங்கட சுப்ரபாதம், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் மற்றும் ஸ்ரீ ராம சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மேலும் மெருகேற்றும் வண்ணம், குருகுல அமைப்பை சார்ந்த மாணவ, மாணவிகள் வயலின் இசைக் கச்சேரி நடத்தினர். இதைத் தொடர்ந்து நொய்டா ஐயப்ப சேவா சமிதி குழுவின‌ரின் ஹரிபஜன் நடைபெற்றது. இதன் பிறகு ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


மாலை வாராந்திர ஸ்ரீ விஷ்ணு பாராயணத்துடன் துவங்கி, ஈரோடு பாலாஜி பாகவதரின் உபன்யாஸத்துடன் முடிவடைந்தது.
எராளமான ஆன்மீக அன்பர்கள் பல இடங்களில் இருந்து வந்து இந்நிகழ்ச்சியில் பங்கு கொண்டு மேலும் சிறப்பித்தனர்.



- தினமலர் வாசகர் எம். வீ.தியாகராஜன் 


Advertisement
மேலும் பிற மாநிலங்கள் செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

ரசிகப்ரியாவின் ஸ்வாதி ஸ்ம்ருதி

ரசிகப்ரியாவின் ஸ்வாதி ஸ்ம்ருதி ...

சரோஜினி நகர் சங்கீத அகண்டம்

சரோஜினி நகர் சங்கீத அகண்டம்...

தமிழ்ச் சான்றிதழ் தேர்வு

தமிழ்ச் சான்றிதழ் தேர்வு...

டில்லியில் ந்ருத்ய தர்பண்

டில்லியில் ந்ருத்ய தர்பண்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us