நம்மாத்துல பெரியவா என்ற திட்டத்தின் கீழ் ஏப்ரல் 2020 வரை பல ஊர்களில் வெவ்வேறு கிரஹத்திற்கு ஸ்ரீ மஹா பெரியவாளின் பிரதிமையுடன் விஜயம் செய்து சங்கராபுரம் ஒரு பரிட்சயம் என்ற நோக்கில் பல சத்சங்கம் நடத்த திரு . கி . வெங்கடசுப்ரமணியன் மேனேஜிங் டைரக்டராக உள்ள வைஷ்ணவி டிரஸ்ட்டாலும் அதற்கு உறுதுணையாய் இருக்கும் பல ஆன்மீக பக்தர்களாலும் தீர்மானிக்கப்பட்டு தமிழ்நாட்டின் பல இடங்களில் சத்சங்கம் நடைபெற்று கொண்டு வருகிறது .
இதன் தொடச்சியாக பெங்களூர் நகர் வாழ் ஸ்ரீ மஹா பெரியவாளின் பக்தர்கள் பலரின் வேண்டுகோளுக்கு இணங்கி , இத்திட்டத்தின் தொடர் சத்சங்க நிகழ்ச்சி, திரு. கே. என். பிரபாகரன் மேற்பார்வையில், ஜூலை 20 மற்றும் 21 அன்று பெங்களூரில் நடந்தது .
வெவ்வேறு பகுதிகளில் வாழும் ஆஸ்திகர்கள் அனுக்கிரஹம் பெற ஏதுவாக பெங்களூர் மாநகரின் பலப்பல பகுதிகளிலுள்ள கீழ்கண்ட பக்தர்களின் இல்லங்களில் பதினான்கிற்கும் மேலான பெரியவாளின் விஜயம் நடந்தது.
20 - ம் தேதி - சனிக்கிழமை :
ஸ்ரீ சம்பத்குமார் - ஸ்ரீமதி காயத்ரி - ஜன ஜீவா ஸ்ப்ளெண்டர், ஸ்ரீ ஆனந்த் - ஸ்ரீமதி பாரதி - எலக்ட்ரானிக் சிட்டி, ஸ்ரீமதி புஷ்கலா - ஜெயா நகர், ஸ்ரீ சுந்தரேசன் - ஸ்ரீமதி சாரதா - எச்.ஏ.எல், ஸ்ரீ பரிமளரங்கன் - ஸ்ரீமதி சுஜாதா- ஜெகதீஷ் நகர், ஸ்ரீ ஜெயராமன் - ஸ்ரீமதி கிரிஜா ஜெயராமன் - ககாதாசபுரம், ஸ்ரீ கார்த்திக் பரமேஸ்வரன் - ஸ்ரீமதி கிருத்திகா - மைத்ரி லே அவுட், ஸ்ரீ வெங்கட்ரமணி - ஸ்ரீமதி சரஸ்வதி - சானசந்திரா, ஸ்ரீ வெங்கட்ரமணி - ஸ்ரீமதி காயத்ரி - புரூக்பீல்டு.
21 - ம் தேதி - ஞாயிற்றுகிழமை
ஸ்ரீ பாலசுப்ரமணியம் - ஸ்ரீமதி பத்மா - மாருதி சேவா நகர், ஸ்ரீ கிருஷ்ணன் - ஸ்ரீமதி அஷ்வினி, ஸ்ரீ சந்திரசேகர் - ஸ்ரீமதி மீனாக்ஷி- எலஹன்கா, ஸ்ரீ கல்யாணராமன் - ஸ்ரீமதி ரேவதி - ஜலஹல்லி கிழக்கு, ஸ்ரீ மணிகண்டன் - ஸ்ரீமதி ஜெயஸ்ரீ - நாராயணபுரா
முதலில் ஸ்ரீ மஹாபெரியவா பிரதிமைக்கு பூரண கும்ப மரியாதை செலுத்தி பூஜராதனைகள் செய்யப்பட்டன.
பிறகு மாயவரம் அருகில் கூத்தனூர் என்ற கிராமத்தனருகில் உருவாகி கொண்டு வரும் சங்கராபுரம் என்ற நூதன வேத கிராமத்தை பற்றி ஸ்ரீ வைஷ்ணவி டிரஸ்டின் மேனேஜிங் டைரக்டர் ஸ்ரீ .கி.வெங்கடசுப்ரமணியன் நீண்ட விரிவுரை ஆற்றினர்.
தனது உரையில் திரு. கி. வெங்கடசுப்ரமணியன், காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவாளின் அனுகிரஹத்துடன் 108 அக்னிஹோத்ரிகள் மாயவரம் அருகில் வரவிருக்கும் சங்கராபுரம் என்ற ஒரு நூதன வேத கிராமத்தில் தங்கள் கிரஹத்திலிருந்து நித்ய அனுஷ்டானம் செய்தும் , வேத முறைப்படி 200 வித்யார்த்திகளுக்கு அவர்கள் மூலம் கிடைக்கப்போகும் குருகுல முறையிலான வேத அத்யனம் மற்றும் அதனுடன் கூடிய ஸ்ரீ மஹா பெரியவா கோயில் , புஷ்கரிணி , நந்தவனம் , தேசிய பசுக்களை கொண்ட கோசாலை பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார் .
பெங்களூரின் பல பகுதிகளில் நடந்த இந்த நிகழ்ச்சிகளில் சிறுவர் சிறுமியர் உட்பட பல்வேறு வயதினை சார்ந்த பக்தர்கள் பெருமளவு கலந்து கொண்டது , ஸ்ரீ மஹா பெரியவாளின் ஆர்கர்ஷணம் எவ்வளவு தூரம் ஒவ்வொரு பக்தர்களிடமும் வியாபித்துள்ளது என்பதை எடுத்து காட்டுவதாக இருந்தது .
அடுத்த சத்சங்கம் ஜூலை 23, 25, 26, 27 மற்றும் 28ம் தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளது. ஆன்மிக அன்பர்கள் அணைவரும் இதில் பங்கு கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு :
வக்கீல் அண்ணா
கைப்பேசி எண் : 9841032959
போரற்ற உலகம், பகையற்ற சூழல், பிணியற்ற சமுதாயம் அமையட்டும்: மகரிஷி பரஞ்ஜோதியார்...
தில்லி கரோல் பாக் நரசிம்மர் கோவிலில் நரசிம்ம ஜெயந்தி...
தில்லி சரோஜினி நகர் பிள்ளையார் கோவிலில் பிரதோஷ வழிபாடு...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.