செய்திகள்

திவ்யாவின் திவ்யமான தமிழ் இசை

ஆகஸ்ட் 10,2019  IST

டில்லி தமிழ் சங்கத்தில் சென்னை திவ்யா ராமகிருஷ்ணனின் தமிழ் இசை நிகழ்ச்சி நடைபெற்றது .
சதா ஆனந்தம் அளிக்கும் வேழமுகத்தோனை அழைக்க பாபநாசம் சிவனின் பிரபலமான கஜவதனா கருணா சதனாவை (ஸ்ரீ ரஞ்சனி) இனிமையாக பாடி இசைமாலையை துவங்கினார்.
அதே கஜவதனாவில் நிரவலை அமைத்து அருகு,பிச்சி,முல்லை,செண்பகம் ரோஜா என ஒவ்வொரு மலராக அர்ச்சித்து வரும் விநாயகர் சதுர்த்தி நாயகனை ஆனந்தமாய் வலம் வந்து கொண்டு ,தமிழ் சங்க மேடையில் தமிழிசை பாடல்கள் கேட்பது மிக்க மகிழ்ச்சியான தருணம் பெரியசாமி தூரனின் ' முருகா முருகா என்றால் உருகாத மனமும் உருகிவிடும் என்பதை இழைந்து இழைந்து சாவேரியில் பாடியது நம் நெஞ்சை தொட்டது .மீண்டும் தூரன் வரிகளில் தாயே திரிபுரசுந்தரி உமா மஹேஸ்வரியில் திருவான்மியூர் தேனார்மொழி வல்லியை வர்ணித்துக்கொண்டு அடுத்து அம்புஜனாமா தயாளனை அலர்மேல் மங்கை மணாளனை திருப்பதி வேங்கட ரமணனை ஆராதித்த கையோடு பட்ணம் சுப்ரமணியரின் ரகு வம்சசுதாவில் குதூகலமாய் அவையோரை மகிழ்வித்து கொண்டு தொடர்ந்த கபாலியில் சபையோரை நிமிர்ந்து உட்காரவைத்தார் .எப்பொழுதும் தெரிந்த க்ருதிகளுக்கு கொஞ்சம் ஆமோதிப்பு அதிகம் தான்.இசை பிரியர்கள் அதிகம் கேட்டு ரசித்த பாபநாசம் சிவனின் காபாலி கருணை நிலவு பொழியும் வதனமோடு -நல்ல கரகோஷத்தை எதிரொலித்தது.
சிவனின் வரிகள் எளிமையானவை.ஆனாலும் பாடும்போது கவனமாக உச்சரிக்க வேண்டிய சூட்சுமம் அவசியம் .மயிலை கபாலீஸ்வரனை கருணை பொழிபவனை மதிசூடியவன் ,திரிசடையான்,புலித்தோல் அணிந்தவன் உடல் முழுவதும் விபூதி பூசியவன் ,கையில் உடுக்கை -திரிசூலம் ஏந்தியவன் என்ற வர்ணனைகள் சிவனுக்கே உரியவை.இதில் கைலாஷின் சமயோஜித வாசிப்பு -அதிர முழங்கும் வரிகளை சிறப்பித்து காட்டியது.பாடலுக்கு இணைந்த வாய்ப்பு என்பதை விட பாடலை உயர்த்தி காட்டியது.
நல்ல பக்கவாத்தியத்திற்கே உள்ள அனுசரணையை காணமுடிந்தது அன்னமய்யாவின் 'பிரம்ம ஒக்கட்டே ' ரசிகர்களை தாளமிடவைத்துக்கொண்டு நீல கருணாகரனே நடாஜாவில் தொடர்ந்து அந்த நிலைப்பாட்டை தொடர்ந்து மிக அருமையான இசை மாலையை அளித்தார் வயலினில் டில்லி உமா அருணின் ஆரவாரமில்லா அமைதியான வாசிப்பு திவ்யாவின் கச்சேரிக்கு ஒத்துழைத்து இயைந்து வந்தது.மிருதங்கம் வாசித்த சென்னை பாலகன் கைலாஷுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது. 
தமிழிசை தந்த இளம் கலைஞர்களை தமிழ் சங்கம் சார்பில் தலைவர் இந்துபாலா கௌரவித்தார் .இணை தலைவர் பென்னேஸ்வரன் ,செயலர் முகுந்தன் வாழ்த்தி பேசினார்கள்.நிகழ்வை தமிழ் சங்க அருணாச்சலம் தொகுத்து வழங்கினார்கள்.
- நமது செய்தியாளர் மீனா வெங்கி 


Advertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

நினைத்ததை முடித்தவர்!- நவ., 29ல் நூற்றாண்டு விழா

நினைத்ததை முடித்தவர்!- நவ., 29ல் நூற்றாண்டு விழா...

உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வுப் பேரணி

உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வுப் பேரணி...

சிவசுப்பிரமணியபுரத்தில் டெங்கு விழிப்புணர்வு முகாம்

சிவசுப்பிரமணியபுரத்தில் டெங்கு விழிப்புணர்வு முகாம் ...

நொய்டா கோயிலில் ஶ்ரீ ஸ்கந்த சஷ்டி திருவிழா

நொய்டா கோயிலில் ஶ்ரீ ஸ்கந்த சஷ்டி திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us