செய்திகள்

புதுடில்லியில் வரம் தரும் வரலட்சுமி பூஜை

ஆகஸ்ட் 18,2019  IST

செல்வ வளம் தரும் வரலட்சுமியை வணங்கினால் குறையாத செல்வம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனைக் கருத்தில் கொண்டு ஆண்டு தோறும் ஆடி அல்லது ஆவணி மாதங்களில் வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது.
எட்டு வகையான செல்வங்களை வாரி வழங்குபவள் அன்னை லட்சுமி. மஞ்சள் பட்டு உடுத்தி மகாவிஷ்ணுவின் திருமார்பில் குடியிருப்பவள் லட்சுமி தேவி. மகாலட்சுமியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என அஷ்ட லட்சுமிகளாக வழிபடுவர். இவ்வாறு அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என்கிறது சாஸ்திரம். எனவே, ஒன்பது நூல் இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறை (சரடை) பூஜையில் வைத்து வழிபடுகின்றனர்.


வரலட்சுமி விரதத்தின் மேன்மையைச் சொல்லும் புராணக் கதைகள் நிறைய உண்டு. சௌராஷ்டிர நாட்டின் ராணியாக இருந்த சுசந்திரா, செல்வ வளத்தின் மமதையால் ஒருமுறை மகாலட்சுமியை அவமதித்தாள். கர்வம் கொண்டு அன்னை லட்சுமியை அவமதித்ததால், செல்வம் அனைத்தும் இழந்து வாடினாள். ராணி சுசந்திராவின் மகள் சாருமதி, தெய்வாதீனமாக ஒருமுறை வரலட்சுமி விரதம் பற்றி அறிந்தாள். அதுமுதல் அந்த விரதத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்கினாள். சாருமதியின் இந்த விரதத்தால் மகிழ்ந்த அன்னை லட்சுமி, அவளுக்கு நலன்கள் அனைத்தும் அருளினாள். தன் மகளின் நிலையைப் பார்த்து, அவள் கடைப்பிடித்த வரலட்சுமி விரதத்தை தானும் கடைப்பிடித்து, இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றாள் சுசந்திரா. அவள் வாழ்வு மீண்டும் வளம் நிறைந்ததாக ஆனது என்கிறது புராணகதை.
இந்த விரதம் அனுஷ்டிக்கும் பெண்கள் உலகமெங்கம் சிறப்பாக கொண்டாடுகிறார்கள் வரலட்சுமி விரதத்தை ஒட்டி வியாழக்கிழமை மாலையே அம்மன் அழைப்பு நிகழ்ச்சிக்காக வீடுகளில் கும்பத்தில் தேங்காய் வைத்து அதில் அவரவர் வழக்கப்படி அம்மனை அலங்கரித்து வைத்திருகிறார்கள்.வீட்டின் உள்ளும் வாசலிலும் மாக்கோலம் இட்டு செம்மண் ஓரமிட்டு நலம் தரும் லக்ஷ்மியை இல்லம்வர மகிழ்வுடன் அலங்கரிக்கிறார்கள். வெள்ளியன்று காலை நல்லநேரம் பார்த்து வரவேற்கும் பாட்டுப்பாடி லக்ஷ்மியை கலசத்துடன் அழைத்துவந்து மண்டபத்தில் வைக்கிறார்கள்.மண்டபம் நான்குபுறமும் வாழைமரம் கட்டி மாவிலை தோரணம் என்று ஆர்வமுடன் குடும்பமே ஈடுபட்டு தேவியை அழைக்க தயாரா கிறார்கள்
அம்மனுக்கு நகைகள், பூமாலைகள் அணிவித்து பிரமாண்டமாக அலங்காரம் செய்து வைத்திருந்தனர். அம்மனுக்கு பிடித்தமான சர்க்கரை பொங்கல், பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, சுண்டல் ,இட்லி லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு போன்ற பல பொருட்களை அவரவர் குடும்பவழக்கப்படி நிவேதனமாக படைக் கிறார்கள். ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழை, நாவல்,கொய்யா ,திராட்சை உள்ளிட்ட நிவேதனப் பொருள்களை கலசத்துக்கு முன்னர் வைத்து வழிபடுகிறார்கள்.. பின்னர் பூஜையில் கலந்து கொண்ட சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம், மஞ்சள் கயிறு, பிரசாதம் வழங்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை முழுவதும் பூஜையில் இருக்கும் அம்மன் அலங்காரம் சனிக்கிழமை காலையில் வடக்கு திசையில் சற்று நகர்த்தி வைக்கப்படும். இரவில் அம்மன் முகத்தை எடுத்து அரிசி பானையில் வைத்து விட்டு அலங்காரத்தை கலைப்பார்கள்.வரலட்சுமி விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. நண்பர்கள்,உறவினர் வீட்டில் நடக்கும் பூஜையில் கலந்துகொண்டு லட்சுமி அருளை மற்றவரும் பெறுகிறார்கள்.
-நமது செய்தியாளர் மீனா வெங்கி 

Advertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

நினைத்ததை முடித்தவர்!- நவ., 29ல் நூற்றாண்டு விழா

நினைத்ததை முடித்தவர்!- நவ., 29ல் நூற்றாண்டு விழா...

உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வுப் பேரணி

உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வுப் பேரணி...

சிவசுப்பிரமணியபுரத்தில் டெங்கு விழிப்புணர்வு முகாம்

சிவசுப்பிரமணியபுரத்தில் டெங்கு விழிப்புணர்வு முகாம் ...

நொய்டா கோயிலில் ஶ்ரீ ஸ்கந்த சஷ்டி திருவிழா

நொய்டா கோயிலில் ஶ்ரீ ஸ்கந்த சஷ்டி திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us