செய்திகள்

வேத கிராமம் ஸ்ரீ சங்கராபுரம் குறித்து தலைநகர் தில்லியில் இரண்டாவது சத்சங்கம்

அக்டோபர் 20,2019 

வேத கிராமம் ஸ்ரீ சங்கராபுரம் குறித்து தலைநகர் தில்லியில் இரண்டாவது சத்சங்கம் நடந்தேறியது
ஸ்ரீ வைஷ்ணவி டிரஸ்ட் சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் வேத கிராமமாக மேம்படுத்தப்பட்டு வரும் ஸ்ரீ சங்கராபுரம் குறித்து அக்டோபர் 11 முதல் 13ஆம் தேதி வரை தில்லி, நொய்டா மற்றும் குருகிராமில் சத்சங்கம் நடைபெற்றது.அக்டோபர் 11ம் தேதி காலை 7.15 மணியளவில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் ஸ்ரீ சங்கராபுரம் சத்சங்கம் குழுவினர் ஸ்ரீ மகா பெரியவா பிரதிமையுடன் தில்லி ரயில் நிலையம் வந்து சேர்ந்தனர். அங்கு ஸ்ரீ மகா பெரியவாளை (பிரிதிமை) பூரண கும்பம் மரியாதையுடன் வரவேற்றனர்.


ரோகிணியில் வசிக்கும் திரு. எம். வீ. தியாகராஜன் கிரஹத்தில் ஸ்ரீ மகாபெரியவா பிரதிமைக்கு அஷ்டோத்தர பூஜை நடந்தது. இதைத் தொடர்ந்து அன்று மாலை பிரதோஷத்தை முன்னிட்டு அருணா ஆசப் அலி மார்கில் அமைந்திருக்கும் தேவி காமாட்சி மந்திரில் ஸ்ரீ மகாபெரியவா பிரிதிமையை பொள்ளாச்சி திரு. கணேசன் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றார். இதையடுத்து சத்சங்கம் தொடங்கியது.
இரண்டாம் நாள், அக்டோபர் 12ம் தேதி காலை 8.00 மணியளவில் சவுத் இந்தியன் சமாஜம், சரோஜினி நகர் பகுதியில் முதல் சத்சங்கம் நடைபெற்றது. இதை தொடர்ந்து மயூர் விஹார் பேஸ் மூன்றில் அமைந்துள்ள இஷ்ட சித்தி விநாயகர் கோவிலில் காலை 11.30 மணியளவில் இரண்டாவது சத்சங்கம் நடைபெற்றது.

மூன்றாவது சத்சங்கம் ஸ்ரீ சங்கடஹர கணபதி கோவில், வசுந்தரா என்கிளேவ் பகுதியில் மதியம் 3.00 மணிக்கும், நம்மாத்துல ஸ்ரீ மஹா பெரியவா விஜயம் ஸத்சங்கம் நொய்டாவில் அமைந்துள்ள திரு. மீனாட்சி சுந்தரம் கிரஹத்திலும் 5.00 மணிக்கும் நடைபெற்றது. இதை தொடர்ந்து நொய்டா செக்டார் 42ல் அமைந்துள்ள சங்கர மடத்தில் கடைசி சத்சங்கம் மாலை 6.00 மணியளவில் மிகச் சிறப்பாக நடந்தது. இந்நிகழ்வில் 25க்கும் மேற்பட்ட இளம் இசைக் கலைஞர்கள் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஸ்ரீ மகாபெரியவாளின் மேல் பக்தி பாமாலை பாடியும் மற்றும் நாட்டிய மாடியும் தங்கள் பக்தியை வெளிப்படுத்தினர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து இசைக்கலைஞர்களையும் திரு. வக்கீல் அண்ணா நொய்டா விஷ்ணு சகஸ்ரநாம சத்சங்கம் மற்றும் ஸ்ரீ சங்கராபுரம் மகாபெரியவா அக்னிஹோத்ரிகள் குருகுல கிராமம் சார்பில் பரிசுகள் வழங்கி கெளரவித்தார்.
மூன்றாம் நாள், 13 அக்டோபர் காலை 8.00 மணிக்கு ரோகிணி செக்டார் 16ல் அமைந்துள்ள மா ஆதிசக்தி மந்திரில் ருத்ரா அபிஷேகத்துடன் சத்சங்கம் தொடங்கியது. இதைத் தொடர்ந்து கனாட்பிளேஸ் கணேஷ் மந்திரில் காலை 11.30 மணிக்கும், திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் மதியம் 2.30 மணிக்கும், இதை தொடர்ந்து மாலை 6.00 மணிக்கு குரு கிராம் டி. எல். எப். பேஸ் நான்கில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி கணேஷ் மந்திரில் சத்சங்கம் நடந்து முடிவடைந்தது.
மிகவும் விமர்சையாக நடைப்பெற்ற இந்நிகழ்வில் ஏராளமான ஆன்மீக அன்பர்கள் மற்றும் ஸ்ரீ மஹா பெரியவா பக்தர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை மேலும் சிறப்பித்தனர். ஸ்ரீ மஹா பெரியவாள் பிரதிமைக்கு ஆரத்தி மற்றும் பூரண கும்ப மரியாதையுடன் ஒவ்வொரு சத்சங்கத்திலும் வரவேற்பு நடந்தது. பிறகு மாயவரம் கூத்தனூர் கிராமத்தினருகில் உருவாகி வரும் ஸ்ரீ சங்கராபுரம், ஒரு நூதன வேத கிராமத்தை பற்றி ஸ்ரீ வைஷ்ணவி டிரஸ்டின் மேனேஜிங் டிரஸ்டி திரு. கி.வெங்கடசுப்ரமணியன் (வக்கீல் அண்ணா) ஒரு நீண்ட விரிவுரை வழங்கினார்.
நிகழ்ச்சியை தில்லி சங்கராபுரம் குழுவினர் எம். வீ. தியாகராஜன், பி. சாய்ராம், எம். ஜெயராமன் மற்றும் சத்யா குருமூர்த்தி ஏற்பாடு செய்திருந்தனர். 
- தினமலர் வாசகர் எம். வீ. தியாகராஜன்


Advertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

நொய்டாவில் புரட்டாசி முதல் சனிக்கிழமை உற்சவம்

நொய்டாவில் புரட்டாசி முதல் சனிக்கிழமை உற்சவம்...

நொய்டாவில் ராகு–கேது பெயர்ச்சி விழா

நொய்டாவில் ராகு–கேது பெயர்ச்சி விழா...

நொய்டாவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

நொய்டாவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்...

74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தாராவியில் இரத்ததான முகாம்

74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தாராவியில் இரத்ததான முகாம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us