செய்திகள்

நொய்டா கோயிலில் ஶ்ரீ ஸ்கந்த சஷ்டி திருவிழா

நவம்பர் 03,2019  IST

நொய்டா: நொய்டா 62 ஆம் செக்டாரில் உள்ள ஶ்ரீ விநாயகர் ஶ்ரீ கார்த்திகேயர் கோயிலில் ஶ்ரீ ஸ்கந்த சஷ்டி திருவிழாவுக்கு, வேத பிரசார சன்ஸ்தான் ஏற்பாடு செய்திருந்தது. நாள் முழுவதும் நடைபெற்ற நிகழ்வில், காலையில் எண்ணெய், திரவிய பொடி, மஞ்சள், மாப்பொடி, பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், பழச்சாறு, கரும்புச்சாறு, இளநீர், விபூதி மற்றும் சந்தனம் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து ராஜ அலங்காரம் செய்யப்பட்டு பின் அனைவருக்கும் மகாபிரசாதம் வழங்கப்பட்டது.
மாலையில் முருக கோஷம் நாமாவளி நடைபெற்றது. கார்த்திகேய பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை செய்து, அனைவருக்கும் மகா பிரசாதம் வழங்கப்பட்டது. அனைத்து பூஜைகளும் மணிகண்டன் வாத்தியார் மேற்பார்வையில் நடைபெற்றது.


நொய்டா மற்றும் சுற்றுப்புறங்களில் இருந்தும் பெருமளவில் பக்தர்கள் வதிருந்தனர். ஶ்ரீ கார்த்திகேயப் பெருமானை அலங்காரத்தில் கண்ட பக்தர்கள், “வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா” என்று முழங்கினர். “ முருகனின் மறுபெயர் அழகு” என்ற பாடலையும் சிலர் பாடினர்.
- தினமலர் வாசகர் எஸ்.வெங்கடேஷ் 


Advertisement
மேலும் பிற மாநிலங்கள் செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

தர்மசாஸ்தா சேவா சமிதியின் வெள்ளிவிழா

தர்மசாஸ்தா சேவா சமிதியின் வெள்ளிவிழா...

வர்ணம் வாய்ப்பாட்டுப் போட்டி: பரிசு வழங்குவிழா

வர்ணம் வாய்ப்பாட்டுப் போட்டி: பரிசு வழங்குவிழா...

தர்ம சாஸ்தா சேவா சமிதி மண்டலம் ஆரம்பம்

தர்ம சாஸ்தா சேவா சமிதி மண்டலம் ஆரம்பம்...

தில்லி தமிழ் சங்கத்தில் ப்ரமராம்பிகாவின் பரதநாட்டியம் அரங்கேற்றம்

தில்லி தமிழ் சங்கத்தில் ப்ரமராம்பிகாவின் பரதநாட்டியம் அரங்கேற்றம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us