செய்திகள்

வர்ணம் வாய்ப்பாட்டு போட்டி

நவம்பர் 13,2019  IST

புதுடில்லி ராமகிருஷ்ணாபுரம் தென் இந்திய சமுதாய அமைப்பின் சார்பில் ஜூனியர் மற்றும் சீனியர்களுக்கான 9 ஆவது வர்ணம் வாய்ப்பாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் 26 பேர் பங்கேற்றனர்.
கர்னாடக கலைஞர்கள் அல்மேலு பரமேஸ்வரன், கே.வெங்கடேஸ்வரன், பாலகிருஷ்ணன் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். ஜூனியர் பிரிவு: முதல் பரிசு: ஆகாஷ் குருமூர்த்தி ( குரு- வசந்தி கிருஷ்ணா ராவ்); 2 ஆம் பரிசு: வைஷ்ணவி ஷிவானி ( குரு- பி.பி.கண்ணாகுமார்); காம்யா ரவி ( குரு- நிஹாரிகா ஶ்ரீகாந்த்); 3 ஆம் பரிசு: ஷிவாஶ்ரீ ( குரு- அபூர்வா ரவீந்திரன்); பி.சவும்யா ( குரு- அலமேலு பரமேஸ்வரன்). சீனியர் பிரிவு: முதல் பரிசு: அனன்யா வெங்கடேசன் ( குரு- பிரசாந்த் கோபிநாத் பாய்); 2 ஆம் பரிசு: ஷ்ரேஷ்தா ஹரிஹரன் ( குரு- பிரசாந்த் கோபிநாத் பாய்); 3 ஆம் பரிசு: ஸ்நேகா சதீஷ் ( குரு- அலமேலு பரமேஸ்வரன்) 


வெற்றி பெற்றவர்களுக்கு 24 ஆம் தேதி நடைபெறும் ரொக்க பரிசு, கேடயம், சான்றிதழ் வழங்கப்படும். ஷிவாஶ்ரீயின் பிரார்த்தனையுடன் போட்டி துவங்கியது. நடுவர்கள், தென் இந்திய சமுதாய அமைப்பின் தலைவர் ஆர்.கே.வாசன், துணைத்தலைவர் எஸ்.கிருஷ்ணசாமி குத்துவிளக்கு ஏற்றினர். போட்டியாளர்கள் பிரபலமான மற்றும் அரிதான வர்ணங்களைப் பாடினர். எஸ்.கிருஷ்ணசாமி நிகழ்வைத் தொகுத்து வழங்க, ஆர்.கே.வாசன் நன்றி கூறினார்.

1965ல் துவக்கப்பட்ட துவக்கப்பட்ட ராமகிருஷ்ணாபுரம் தென் இந்திய சமுதாய அமைப்பு, கர்னாடக இசையில் வளர்ந்து வரும் இளம் கலைஞர்களை ஊக்குவித்து வருகிறது.

- தினமலர் வாசகர் எஸ்.வெங்கடேஷ் 


Advertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

நீரிழிவு இல்லா உலகை உருவாக்க சபதமேற்போம்: மகரிஷி பரஞ்ஜோதியார் உரை

நீரிழிவு இல்லா உலகை உருவாக்க சபதமேற்போம்: மகரிஷி பரஞ்ஜோதியார் உரை...

பேராசிரியர் எச் வேங்கடராமன் நூற்றாண்டு விழா

பேராசிரியர் எச் வேங்கடராமன் நூற்றாண்டு விழா...

உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வுப் பேரணி

உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வுப் பேரணி...

சிவசுப்பிரமணியபுரத்தில் டெங்கு விழிப்புணர்வு முகாம்

சிவசுப்பிரமணியபுரத்தில் டெங்கு விழிப்புணர்வு முகாம் ...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us