செய்திகள்

உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வுப் பேரணி

நவம்பர் 15,2019  IST

நவம்பர் 14 ஆம் தேதியை உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு தினமாகக் கொண்டாடுவது வழக்கம் . இதையொட்டி சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் மருத்துவர்கள் – மாணவர்கள் – நிறுவன ஊழியர்கள் – பொது மக்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. ஆயுஷா – ஆயுஷ்பதி பதாகைகள் பேரணி முன்பு எடுத்துச் செல்லப்பட்டன. பேரணியினர் “ ஓம் “ என்ற பிரணவ மந்திரத்தை உரக்க முழங்கியபோது கடல் அலையும் பறவைகளின் ஒலியும் சேர்ந்து தெய்விக மணம் பரப்புவதாய் அமைந்தது மெய் சிலிர்க்க வைத்தது. உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலை தென்கயிலை உலக சமாதான அறக்கட்டளை அறங்காவலர்கள் கே.விநாயகம் ( சென்னை சில்க்ஸ் ) பொறியாளர் திருச்சி சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


நீரிழிவு நோய் இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்தியாவில் 49 சதவிகிதத்தினர் இதற்காளாகியுள்ளனர். தமிழகத்தில் 45 இலட்சம் பேர் இக்குறைபாட்டால் அல்லல் பட்டுக்கொண்டுள்ளனர். இக்குறைபாட்டை முழுமையாக நீக்குவதே ஆயுஷா – ஆயுஷ்பதி அமைப்பின் குறிக்கோளாகும். அலோபதி – யோகா – இயற்கை மருத்துவம் – யுனானி – சித்தா – ஓமியோபதி – மற்றும் ஆயுர்வேதம் ஆகிய மருத்துவ முறைகள் இணைந்து இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண இயலும். உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலையில் டிசம்பர் முதல் தேதி இது சம்பந்தமான சர்வ தேச கருத்தரங்கு நடைபெற உள்ளது. இதில் இது சம்பந்தமான மருத்துவ நிபுணர்கள் கலந்து கொள்ளுகின்றனர். இதில் திரளாகப் பங்கேற்க இவ்வமைப்பு அழைப்பு விடுக்கிறது. இந்த அமைப்பு தமிழக அரசின் முழு ஒத்துழைப்போடு – மக்கள் நல்வாழ்வுத் துறை ஆதரவுடன் பல மருத்துவ முகாம்களை நடத்தி வருவது குறிப்பிடத் தகுந்ததாகும். தென்கயிலை ஞான பீடாதிபதி ஜெகத்குரு மகாமகரிஷி குருமகான் பரஞ்ஜோதியாரின் “ அனைவருக்கும் ஆரோக்கியம் 2020 –இல் “ என்ற இலட்சியத்தை இவ்வமைப்பு நிறைவேற்றும்.
- நமது செய்தியாளர்  வெ.புருஷோத்தமன்


 

Advertisement
மேலும் பிற மாநிலங்கள் செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

புதுதில்லி ரோகிணி ஸ்ரீ ஜயப்பன் கோவிலில் நாட்டிய கலை நிகழ்ச்சி

புதுதில்லி ரோகிணி ஸ்ரீ ஜயப்பன் கோவிலில் நாட்டிய கலை நிகழ்ச்சி ...

சவும்யா லக்ஷ்மி நாராயணனின் பரதநாட்டிய நிகழ்ச்சி

சவும்யா லக்ஷ்மி நாராயணனின் பரதநாட்டிய நிகழ்ச்சி...

பாலஸ்ரீ திருவாருர் டி. எஸ். ஸ்ரீராம் அறக்கட்டளை அமைப்பின் 2019 ஆண்டிற்கான நினைவு விருது

பாலஸ்ரீ திருவாருர் டி. எஸ். ஸ்ரீராம் அறக்கட்டளை அமைப்பின் 2019 ஆண்டிற்கான நினைவு விருது...

தர்மசாஸ்தா சேவா சமிதியின் வெள்ளிவிழா

தர்மசாஸ்தா சேவா சமிதியின் வெள்ளிவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us