செய்திகள்

தில்லி தமிழ் சங்கத்தில் ப்ரமராம்பிகாவின் பரதநாட்டியம் அரங்கேற்றம்

நவம்பர் 18,2019  IST

நாட்டிய குரு (தில்லி) திருமதி விஜயலட்சுமி ரமணனின் மாணவி குமாரி ஜி. ப்ரமராம்பிகாவின் பரதநாட்டிய அரங்கேற்றம்  தில்லி தமிழ்ச் சங்கம் திருவள்ளூவர் கலை அரங்கில் மிக சிறப்பாக அரங்கேறியது.
பாடகர் ஸத்ய நாராயணின் கணீரென்ற குரலில் வல்லப் நாயகஸ்ய என்ற பாடலில் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, விநாயகரின் கணேச கவுத்துவத்தில் துவங்கி தொடர்ந்து திஸ்ர நடை அலாரிப்பு செய்து ப்ரமராம்பிகா கம்பீரமாக தன் அரங்கேற்றத்தை துவங்கினார்.
அடுத்து திலங் ராகத்தில் ஜதியும் ஸ்வரமும் இழைய ஜதீஸ்வரம் பிறகு அபினயமும் நிறுத்தமும் கொண்ட காம்போதி ஷண்முகப்பிரியா ஆகிய ராகங்களில் ஸப்தம் ஆடி மகிழ்வித்தார். ஆண்டாளின் பாசுரத்தில் பைரவி ராகத்தில் “கீசு கீசு என்று” என்னும் பாடலுக்கு ஆண்டாள் பெருமாளின் மேல் கொண்ட பக்தி பாவத்தை சிறப்பாக செய்தார்.


பரத நாட்டியத்தின் ஜீவ நாடியாகிய வர்ணம், சிக்கலான சொல் கட்டும் அழகிய பாடலும் கொண்ட தண்டாயுதபாணி பிள்ளையின் சாமியை அழைத்தோடி வா பாடலில் சிதம்பர நாதனாகிய நடராஜனை வர்ணித்து சங்கராபரணம் சாரங்கா, ஆரபி, பைரவி கொண்ட ராகமாலிகையில் விரகதாபத்தை தன் சிறப்பான அபிநயத்தால் வர்ணித்தார்.
துளசி தாஸரின் மிக புகழ்ப்பெற்ற ஶ்ரீ ராம ஸந்திர கிருபாளு என்னும் பஜனில் பக்தி பரவசத்தை காட்டி சபையோர்களை நெகிழச் செய்தார்.
கடைசியாக, தில்லான ராகம் பிலஹரி.
நட்டுவனார் ஸதாசிவம் சங்கர் அவர்களின் சொல்லுக்கட்டிற்கு ஏற்ப தன் பாதங்கள் தாளம் போட ப்ரமராம்பிகா சிறப்பாகஆடி காண்போரை மெய்சிலிர்க்க செய்தார்.
நடன அசைவுகளை குரு திருமதி விஜயலட்சுமி ரமணன் அமைத்திருந்தார். ஒப்பனை (ஷேர் சிங்).
சதாசிவம் ஸத்ய நாராயணன் (பாட்டு), ஸதாசிவம் சங்கர் (நட்டுவாங்கம்), சியாமளா பாஸ்கர் (வீணை), நாகராஜன் (புல்லாங்குழல்) மற்றும் மனோகர் பாலச்சந்திரன் (மிருதங்கம்) என அனைத்து பக்க வாத்தியமும் ஒன்றினைந்து இசைத்தது நிகழ்ச்சிக்கு மேலும் அழகு சேர்த்தது.
சிறப்பு விருந்தினர்களாக கோவா மாநிலத்தின் முன்னாள் கவர்னர் திரு. பரத் வீர் வாஞ்சு மற்றும் அவரின் துணைவியார் திருமதி நளினி வாஞ்சு மற்றும் கெளரவ விருந்தினர்களாக வீணை இசைக் கலைஞர்கள் திரு. ஜெயராஜ் கிருஷ்ணன் மற்றும் திருமதி ஜெயஸ்ரீ கிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
ப்ரமராம்பிகாவின் பெற்றோர்கள் குரூப் கேப்டன் திரு கே. கணேஷ் மற்றும் திருமதி எஸ்.அனுராதா நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
திரு. பி. வெங்கட்ராமன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
- தினமலர் வாசகர் தியாகராஜன்


Advertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

நீரிழிவு இல்லா உலகை உருவாக்க சபதமேற்போம்: மகரிஷி பரஞ்ஜோதியார் உரை

நீரிழிவு இல்லா உலகை உருவாக்க சபதமேற்போம்: மகரிஷி பரஞ்ஜோதியார் உரை...

பேராசிரியர் எச் வேங்கடராமன் நூற்றாண்டு விழா

பேராசிரியர் எச் வேங்கடராமன் நூற்றாண்டு விழா...

உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வுப் பேரணி

உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வுப் பேரணி...

சிவசுப்பிரமணியபுரத்தில் டெங்கு விழிப்புணர்வு முகாம்

சிவசுப்பிரமணியபுரத்தில் டெங்கு விழிப்புணர்வு முகாம் ...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us