வெள்ளி விழா கொண்டாடும் கிழக்கு டில்லி, வசுந்தரா என்க்ளேவ் தர்ம சாஸ்தா சேவா சமிதி சார்பில், ஶ்ரீ சங்கடகர கணபதி கோயிலில் மண்டலம் ஆரம்பம் நடைபெற்றது. காலையில் ஶ்ரீ ஐயப்பனுக்கு அபிஷேகத்துடன் நிகழ்ச்சிகள் துவங்கின. தொடர்ந்து லலிதா சகஸ்ர நாம மண்டலியினரால், விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்யப்பட்டது. மாலையில், ஹம்ஸத்வணி பஜனை குழுவினர் மற்றும் ஆர்கே வாசன் பஜனை பாடல்களைப் பாடினர். தொடர்ந்து தீபாராதனை செய்யப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் அதிக அளவில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வெள்ளி விழாவை ஒட்டி, நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 ஆம் தேதிகளில், வசுந்தரா என்க்ளேவில் பல்வேறு பூஜைகள், பிரபல கலைஞர்களின் பஜனை பாடல்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தர்ம சாஸ்தா சேவ சமிதி ஏற்பாடு செய்துள்ளது.
- தினமலர் வாசகர் எஸ்.வெங்கடேஷ்
நொய்டாவில் 31 வது ஆண்டு சாஸ்தப்ரீதி; ஸ்ரீ ஐயப்பன் பஜன்ஸ் ...
நீரிழிவு இல்லா உலகை உருவாக்க சபதமேற்போம்: மகரிஷி பரஞ்ஜோதியார் உரை...
அயர்லாந்து தலைநகர் டப்ளின் சமூக நல மேம்பாடு விருதுகள் வழங்கும் விழா 2019 ...
டிசம்பர் 14,2019 IST
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.