செய்திகள்

பேராசிரியர் எச் வேங்கடராமன் நூற்றாண்டு விழா

டிசம்பர் 01,2019  IST

திருவையாறு அரசர் கல்லூரிப் பேராசிரியர் எச். வேங்கடராமன் நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை “ரஷியன் கலாச்சாரம் மற்றும் அறிவியல் பண்பாட்டு மைய” அரங்கில், தஞ்சை தமிழ்ப் பல்கலைகழக மேனாள் துணைவேந்தர் ஔவை நடராசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. முனைவர் ஒளவை நடராசனுக்கு, தொழில் அதிபர் நல்லி குப்புசாமி செட்டியார், வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து முனைவர் தி.ராசகோபாலன், மு.வீரையன், முனைவர் இ.கோமதிநாயகம் ஆகியோரும் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றனர்.ஒளவை நடராசன் விழாவில் பேசியதாவது:- தமிழகத்தின் புகழும் பெருமையும் வாய்ந்த தமிழ்க் கல்லூரியாகத் திகழ்ந்த திருவையாற்று அரசர் கல்லூரியில் ஆர்வத்தோடு பங்கு கொண்ட மாணவர்கள் பலர் பின்னாளில் பேராசிரியர்களாகவும் அறிஞர்களாகவும் ஒளி வீசுகின்றனர்.தனித் தமிழ் பயிலுகிற வாய்ப்பு என்பது, இப்போது அறவே இல்லை என்றாலும், தனித்தமிழ் புலமையினுடைய கல்விச் செறிவு என்பது மிகச் சிறப்பாக அமைந்திருந்தது.


அந்த வகையில் பயின்ற பேராசிரியர் இராசேந்திரன், தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராகவும், பேராசிரியர் இராசகோபாலன் கிருத்துவத் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவராகவும், புலவர் வீரைய்யன் புகழ் வாய்ந்த எழுத்தாளராகவும் ஓய்வு பெற்ற பிறகு புலவர் விஜயலட்சுமி தந்தையாரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்துவது பாராட்டுதற்குரியது.புலவர்களைப் போற்றுவது என்பது, இளைஞர்களின் எதிர்காலத்துக்கு ஊக்கம் ஊட்டவதாகும்.
இலக்கண இலக்கிய புலமை செழித்து வளர்வதற்கு பேருதவியாக இருக்கும். தமிழார்வர் குறைந்து வரும் இந்த நாளில், புகழப்படும் பேராசிரியர் வேங்கடராமன் நூற்றாண்டு விழா நினைக்கத்தக்கதாகும். இவ்வாறு ஔவை நடராசன் பேசினார்.
தொடர்ந்து திரு. தேசியமாமணி இல.கணேசன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார், தமிழ் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் ம.இராசேந்திரன், முனைவர் தி.இராசகோபாலன், இ. கோமதிநாயகம் சி. சிவசங்கரன், இள.முருகன், இராம.சிதம்பரம், புலவர் நா.முத்துநிலவன், கோதண்டபாணி, கு.பாலசுப்ரமணியன், சோ.கருப்பசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
தமிழில் சிறந்த மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற 10 மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
பேராசிரியர் வேங்கடராமனின் மகனான தி.வே.ஹரிஹரன் அவர்கள் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.


Advertisement
மேலும் பிற மாநிலங்கள் செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

நொய்டாவில் பொங்கல் திருவிழா '2020

நொய்டாவில் பொங்கல் திருவிழா '2020...

புதுதில்லி ரோகிணி ஸ்ரீ ஜயப்பன் கோவிலில் நாட்டிய கலை நிகழ்ச்சி

புதுதில்லி ரோகிணி ஸ்ரீ ஜயப்பன் கோவிலில் நாட்டிய கலை நிகழ்ச்சி ...

சவும்யா லக்ஷ்மி நாராயணனின் பரதநாட்டிய நிகழ்ச்சி

சவும்யா லக்ஷ்மி நாராயணனின் பரதநாட்டிய நிகழ்ச்சி...

பாலஸ்ரீ திருவாருர் டி. எஸ். ஸ்ரீராம் அறக்கட்டளை அமைப்பின் 2019 ஆண்டிற்கான நினைவு விருது

பாலஸ்ரீ திருவாருர் டி. எஸ். ஸ்ரீராம் அறக்கட்டளை அமைப்பின் 2019 ஆண்டிற்கான நினைவு விருது...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us