செய்திகள்

நீரிழிவு இல்லா உலகை உருவாக்க சபதமேற்போம்: மகரிஷி பரஞ்ஜோதியார் உரை

டிசம்பர் 03,2019  IST

“ இன்று அம்மை நோய் அகற்றப்பட்டு விட்டது. போலியோ இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. காச நோய் காணாமற் போய் விட்டது. இந்த வரிசையில் நீள் நிலத்தில் நீரிழிவு இல்லாத நிலையை உருவாக்க சபதமேற்போம் “ என உடுமலையை அடுத்த தென்கயிலை எனும் திருமூர்த்தி மலை உலக சமாதான அறக்கட்டளை நிறுவனர் தத்துவ தவ உயர் ஞான பீடாதிபதி ஜெகத்குரு மகா மகரிஷி குருமகான் பரஞ்ஜோதியார் டிசம்பர் முதல் தேதி நடைபெற்ற நீரிழிவு நோய் விழிப்புணர்வு சர்வ தேசக் கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றுகையில் குறிப்பிட்டார். 
அவர் மேலும் பேசுகையில், 'நமது முன்னோர் உடல் நலம் – உள நலம் – உயிர் நலம் – ஆன்ம நலம் பெற்று நிறை வாழ்வு வாழ்ந்தனர். அத்தகு சிறப்பான முழுநல வாழ்வை மீண்டும் பெற இன்று ஒருங்கிணைந்த ஆயுஷ்பதி – ஆயுஷா அமைப்பு முனைந்துள்ளது. இந்த ஒருங்கிணைந்த ( ஆயுர்வேதா – யோகா – இயற்கை மருத்துவம் – யுனானி – சித்தா மற்றும் அலோபதி ) மருத்துவத்தின் மூலம் ஒரு விடியலைக் காண்போம். 2025 – இல் நீள் நிலத்தில் நீரிழிவு இல்லா உலகை உருவாக்குவோம். அதற்கான சபதம் மேற்கொள்ளுவோம்'  என்று பலத்த கரவொலிக்கிடையே மகரிஷி பிரகடனம் செய்தார். பங்கேற்ற அனைவரும் எழுந்து நின்று சபதம் மேற்கொண்டது கண்கொள்ளாக் காட்சியாகும்.


ஸ்ரீ பரஞ்ஜோதி யோகா கல்லூரியுடன் இணைந்து நடத்திய இக்கருத்தரங்கு ஆலய மரபுப்படி ஒரு நிமிட அமைதியுடன் தொடங்கியது. தொடர்ந்து குருகீதம் – ஞான கீதம் – தேசிய கீதம் – தமிழ்த்தாய் வாழ்த்து இடம் பெற்றன. குரு மாதா தலைமையில் அஷ்ட தீபம் ஏற்றப்பட்டது. உலக சமாதான ஆலயப் பொதுச் செயலர் கே.எஸ்.சுந்தரராமன் சர்வ சக்தி யக்ஞம் இயற்றினார். கோவை வாசவி மருத்துவ மனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ரவீந்திரநாத், திருப்பூர் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் சி.தனம், பெருந்துறை மருத்துவக் கல்லூரியின் டாக்டர் பூபதி, டாக்டர் சரவணக்குமார்,  தமிழ்நாடு மருந்து கட்டுப்பாடு அலுவலர் டாக்டர் எம்.பிச்சை முதலியோர் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தனர். 
டாக்டர் மகேந்திரன் அலோபதி மருத்துவம் பற்றியும், நாகராஜன் யோகா முறைகள் பற்றியும், டாக்டர் சிவக்குமார் இயற்கை மருத்துவம் பற்றியும் டாக்டர் அனில் மேத்யூ ஓமியோபதி மருத்துவம் பற்றியும் சையது அஹமது யுனானி பற்றியும், டாக்டர் அசோகன் சித்தா மருத்துவம் பற்றியும் உரையாற்றினர். நீரிழிவு இல்லா உலகம் 2025 என்ற உறுதி மொழியை ஆயுஷ்பதியின் தலைவர் டாக்டர் அலெக்ஸ் வாசிக்க எல்லோரும் உறுதி மொழியேற்றனர். 
நிகழ்வில் பங்கேற்ற பிரமுகர்களுக்கு ஆலய அறங்காவர்கள் கே.விநாயகம், பொறியாளர் எம்.சுப்பிரமணியம்,  எஸ்.எம்.சுந்தரமூர்ததி, பொதுச் செயலர் கே.எஸ்.சுந்தரராமன் முதலியோர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். முன்னதாக ஆயுஷா அமைப்பின் தலைமை நிர்வாக அலுவலர் டாக்டர் கார்த்திகேயன் வரவேற்புரை நிகழ்த்தினார். யோகா கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆலய சுற்றுப் புற மக்கள் கலந்து கொண்டு பெரும் பயன் எய்தினர்.
- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்


Advertisement
மேலும் பிற மாநிலங்கள் செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

புதுதில்லி ரோகிணி ஸ்ரீ ஜயப்பன் கோவிலில் நாட்டிய கலை நிகழ்ச்சி

புதுதில்லி ரோகிணி ஸ்ரீ ஜயப்பன் கோவிலில் நாட்டிய கலை நிகழ்ச்சி ...

சவும்யா லக்ஷ்மி நாராயணனின் பரதநாட்டிய நிகழ்ச்சி

சவும்யா லக்ஷ்மி நாராயணனின் பரதநாட்டிய நிகழ்ச்சி...

பாலஸ்ரீ திருவாருர் டி. எஸ். ஸ்ரீராம் அறக்கட்டளை அமைப்பின் 2019 ஆண்டிற்கான நினைவு விருது

பாலஸ்ரீ திருவாருர் டி. எஸ். ஸ்ரீராம் அறக்கட்டளை அமைப்பின் 2019 ஆண்டிற்கான நினைவு விருது...

தர்மசாஸ்தா சேவா சமிதியின் வெள்ளிவிழா

தர்மசாஸ்தா சேவா சமிதியின் வெள்ளிவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us