செய்திகள்

வர்ணம் வாய்ப்பாட்டுப் போட்டி: பரிசு வழங்குவிழா

டிசம்பர் 05,2019  IST

புதுடில்லி: புதுடில்லி, ராமகிருஷ்ணாபுரம், தென் இந்திய சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 9 ஆவது வர்ணம் வாய்ப்பாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகளையும், சான்றிதழ்களையும், கேடயங்களையும், நோய்டா வேத பிரச்சார சன்ஸ்தான் செயல் தலைவர் ரவி பி.சர்மா வழங்கினார். அலமேலு பரமேஸ்வரன், கே.வெங்கடேஸ்வரன், பாலகிருஷ்ணன் ஆகிய நடுவர்கள் தேர்வு செய்த, ஜூனியர் பிரிவு: முதல் பரிசு: ஆகாஷ் குருமூர்த்தி; 2 ஆம் பரிசு: வைஷ்ணவி ஷிவானி, காம்யா ரவி; 3 ஆம் பரிசு: ஷிவ ஶ்ரீ, பி.சவும்யா. சீனியர் பிரிவு: முதல் பரிசு: அனன்யா வெங்கடேசன்; 2 ஆம் பரிசு: ஷ்ரேஷ்தா ஹரிஹரன்; 3 ஆம் பரிசு: ஸ்நேகா சதீஷ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. ரவி பி.சர்மா தம்பதி, சங்கத்தலைவர் ஆர்.கே.வாசன், துணைத்தலைவர் எஸ்.கிருஷ்ணசாமி, அலமேலு பரமேஸ்வரன், ரமணாகேந்திரா நாராயணன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்ற, விழா தொடங்கியது. வைஷ்ணவி ஷிவானி இறைவணக்கம் பாடினார். வெற்றி பெற்றவர்கள் சிறிது நேரம் கச்சேரி செய்தனர்; அவர்களுக்கு உமா அருண்- வயலின், அபிஷேக் அவதானி- மிருதங்கம் வாசித்தனர். இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு அளித்த முத்துகுமார், விஜயா முத்துகுமார் ஆகியோரை சங நிர்வாகம் கவுரவித்தது. குழந்தைகளின் சாதனைகளையும், கர்நாடக இசைத் துறையில் அவர்களைத் தொடர்ந்து ஊக்குவித்து வரும் ராமகிருஷ்ணாபுரம் தென் இந்திய சங்கத்தின் முயற்சிகளையும் தலைமை விருந்தினர் ரவி பி.சர்மா வெகுவாக பாராட்டினார்.


- தினமலர் வாசகர் எஸ்.வெங்கடேஷ்


Advertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

இளைய சமுதாயமே ஓருலக சர்வ சமய சமுத்துவ நல்லாட்சி அமைப்போம்: மகரிஷி பரஞ்ஜோதியார் அழைப்பு

இளைய சமுதாயமே ஓருலக சர்வ சமய சமுத்துவ நல்லாட்சி அமைப்போம்: மகரிஷி பரஞ்ஜோதியார் அழைப்பு...

யாத்கிரி நரசிம்ம ஸ்வாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி

யாத்கிரி நரசிம்ம ஸ்வாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி...

கமலாபுரம் ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா ஸமேத கோபாலகிருஷ்ணன் கோவிலில் வைகுண்ட ஏகாதேசி

கமலாபுரம் ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா ஸமேத கோபாலகிருஷ்ணன் கோவிலில் வைகுண்ட ஏகாதேசி...

மகரிஷி பரஞ்ஜோதியார் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து

மகரிஷி பரஞ்ஜோதியார் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us