செய்திகள்

தர்மசாஸ்தா சேவா சமிதியின் வெள்ளிவிழா

டிசம்பர் 06,2019  IST

 புதுடில்லி: கிழக்கு டில்லி, வசுந்தரா என்க்ளேவ் தர்மசாஸ்தா சேவா சமிதியின் வெள்ளி விழா கொண்டாட்டம் 2 நாள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் வசுந்தரா என்க்ளேவ் மட்டுமல்லாமல், மயூர் விகார், நோய்டா, இந்திரபுரம், வைஷாலி, காஜியாபாத் பகுதிகளிலிருந்தும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முதல் நாள் காலையில் கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடர்ந்து ம்ரித்யுஞ்சயா ஹோமம், ருத்ராபிஷேகம், லக்ஷார்ச்சனை இடம் பெற்றது. கோவை எஸ்.ஜெயராமன் குழுவினரால் பஜனைப் பாடல்கள் பாடப்பட்டன. ஏழைகளுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. மகாதீபாரதனையுடன் காலை நிகழ்ச்சிகள் நிறைவு பெற, பக்தர்களுக்கு மகா பிரசாதம் வழங்கப்பட்டது.மாலையில் வசுந்தரா என்க்ளேவ் லலிதா சக்ஸ்ரநாம மண்டலி சார்பில் லலிதா சகஸ்ரநாம பாராயணம் செய்யப்பட்டது. தலப்போலியுடன் 100 பெண்களும் குழந்தைகளும், 51 கலைஞர்களுடன் செண்டை மேளத்துடன் வசுந்தரா என்க்ளேவைச் சுற்றி வந்தனர். அலங்கரிக்கப்பட்ட தேரில் ஐயப்பன் உலா வந்து பக்தர்களை ஆசிர்வதித்தார். ஐயப்பனை மலர்களாலும் ரங்கோலியுடன் பக்தர்கள் வரவேற்றனர். பந்தலை தெர் வந்தடைந்ததும், சரணகோஷம் முழங்கியது. பஞ்சேரி மேளம் முழங்க, பக்தர்கள் பக்தி பரவசத்தில் நடனம் ஆடினர். படிப்பாட்டு, ஹரிவராசனத்தைத் தொடர்ந்து, மகாதீபாராதனை செய்யப்பட்டது. பக்தர்களுக்கு லகுபக்ஷணம் வழங்கப்பட்டது.


கிழக்கு டில்லி, மயூர் விகார் சத்சங்கத்தினரின் ஶ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணத்துடன் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடர்ந்து வசுந்தரா என்க்ளேவ் பெண்கள் ஹரிநாம கீர்த்தனம் பாடினர். தர்ம சாஸ்தா சேவா சமிதி ஏற்பாட்டில், இசை அமைப்பாளர் டி.எஸ்.ராதாகிருஷ்ணன், பின்னணி பாடகர் மது பாலக்ரிஷ்ணன், வினோத் குமார் ஆகியோரின் பக்திகான மாலை மற்றும் பக்தி பாடல்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. மகாதீபாராதனை செய்யப்பட்டு, பக்தர்களுக்கு மகாபிரசாதம் வழங்கப்பட்டது.


மாலையில் வசுந்தரா என்க்ளேவ் பெண்கள் மற்றும் குழந்தைகளின் கலை நிகழ்ச்சி, ஐயப்ப சரிதம் என்ற தலைப்பில் நடந்தது. இந்த நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற உதவிய அனைவரும் கவுரவிக்கப்பட்டனர். பின்னர் அபிஷேக் குழுவினரின் கிருஷ்ணாயணம் என்ற கிருஷ்ணபரமாத்மாவின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்களின் படிப்பாட்டு மற்றும் ஹரிவராசனத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன


இந்த நிகழ்ச்சிகளில் நீதிபதி ஆஷா மேனன், மீனாக்ஷி லேகி எம்.பி., மனோஜ் குமார் எம்.எல்.ஏ., ராஜிவ் சவுத்ரி ( கோண்ட்லி கவுன்சிலர்), வினோத் குமார் பின்னி ( லக்ஷ்மிநகர் முன்னாள் எம்.எல்.ஏ.,) கலந்து கொண்டனர்.

- தினமலர் வசகர் எஸ்.வெங்கடேஷ் 


Advertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

ஸ்ரீ தியாகராஜ ஆராதனை - நொய்டாவில் திருவையாறு

ஸ்ரீ தியாகராஜ ஆராதனை - நொய்டாவில் திருவையாறு...

சென்னையில் பல்வேறு இடங்களில் நம்மாத்துல ஸ்ரீ மஹாபெரியவா விஜயம் சத்சங்கம்

சென்னையில் பல்வேறு இடங்களில் நம்மாத்துல ஸ்ரீ மஹாபெரியவா விஜயம் சத்சங்கம்...

இளைய சமுதாயமே ஓருலக சர்வ சமய சமுத்துவ நல்லாட்சி அமைப்போம்: மகரிஷி பரஞ்ஜோதியார் அழைப்பு

இளைய சமுதாயமே ஓருலக சர்வ சமய சமுத்துவ நல்லாட்சி அமைப்போம்: மகரிஷி பரஞ்ஜோதியார் அழைப்பு...

யாத்கிரி நரசிம்ம ஸ்வாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி

யாத்கிரி நரசிம்ம ஸ்வாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us