செய்திகள்

நொய்டாவில் 31 வது ஆண்டு சாஸ்தப்ரீதி; ஸ்ரீ ஐயப்பன் பஜன்ஸ்

டிசம்பர் 08,2019  IST

நொய்டாவின் வேதிக்  பிரச்சார் சன்ஸ்தான் (வி.பி.எஸ்) நிர்வாகம் சாஸ்தாபிரீதியை (31 வது ஆண்டு) கொண்டாடியது, அதைத் தொடர்ந்து ஸ்ரீ அய்யப்ப  பஜன்கள்,  அதன் ஸ்ரீ விநாயக மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவிலில், பிரிவு 62, நொய்டாவில் கொண்டாடினர். கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது, அதைத் தொடர்ந்து  பகவான் ஸ்ரீ அய்யப்பனுக்கு அபிஷேகம், ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமத்தின் குழு பாராயணம், மற்றும் ஸ்ரீ ஸ்கந்த சஷ்டி கவாச்சம் நடந்தேறின .


டில்லியை சேர்ந்த ஹம்சத்வனி  பஜனை  குழு ,RK Vasan மற்றும் குழுவினர் ஐயப்பன் 31ஆவது சாஸ்தப்ரீதி விழாவை  ஒட்டி  நொய்டா செக்டர்  62இல் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர் மற்றும்  ஸ்ரீ கார்த்திகேயன் கோவிலில்  ஐயப்பன் பஜனைகளை செய்தனர்.



ஏராளமான  பக்தர்கள் நோய்டாவின் பல்வேறு செக்டர்களில் மட்டும் இல்லாது இந்திராபுரம்,காஜியாபாத்  மற்றும் வைஷாலிபோன்ற இடங்களில் இருந்து வந்திருந்தனர் .


நிகழ்ச்சியின் முடிவில் மஹாதீபாராதனை மற்றும் மஹாப்ரசாதம் விநியோகம் நடைபெற்றன .மற்றும் நானூறுக்கும் அதிகமான பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தேறின .


இந்த விழாவை ஒட்டி,கோவில் நிர்வாகம் சார்பாக  Wg Cdr திரு சந்திரசேகர் எல்லா பக்தர்களையும் வரவேற்று கோவில் திருப்பணிகள்  மற்றும் கோவிலில் நடைபெறும்  பல்வேறு திருப்பணிகள் பற்றி எடுத்துரைத்தார்.திரு.ரகு ,தலைவர்,டெல்லி மலையாளீ சங்கம்,மற்றும் திரு பாபு பணிக்கர் ,பணிக்கர் ட்ராவெல்ஸ் எல்லா கலைஞர்களையும் கவுரவித்தார்.வேதிக் பிரச்சார சன்ஸ்தான் சார்பாக திரு சந்திரசேகரன் அவர்கள் விழாவுக்கு வருகை தந்த தலைமை விருந்தினரை கெரவித்தார் .திரு ரவி சர்மா, செயல் தலைவர், VPS  சார்பாக நன்றி தெரிவித்தார்.


வேதிக் பிரசார் சன்ஸ்தான் கடந்த முப்பதுக்கும் மேலான ஆண்டுகளாக ஒருமித்த கருத்து படைத்த பாக்தர்களால் கீழ்கண்ட இரண்டு கோவில்களை பராமரித்து வருகின்றனர் : 1.ஸ்ரீ வர சித்தி விநாயகர் திருக்கோயில் ,நொய்டா செக்டர் 22, 2.ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோயில் ,நொய்டா செக்டர் 62.




- தினமலர் வாசகர் எஸ்.வெங்கடேஷ்


Advertisement
மேலும் பிற மாநிலங்கள் செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

புதுதில்லி ரோகிணி ஸ்ரீ ஜயப்பன் கோவிலில் நாட்டிய கலை நிகழ்ச்சி

புதுதில்லி ரோகிணி ஸ்ரீ ஜயப்பன் கோவிலில் நாட்டிய கலை நிகழ்ச்சி ...

சவும்யா லக்ஷ்மி நாராயணனின் பரதநாட்டிய நிகழ்ச்சி

சவும்யா லக்ஷ்மி நாராயணனின் பரதநாட்டிய நிகழ்ச்சி...

பாலஸ்ரீ திருவாருர் டி. எஸ். ஸ்ரீராம் அறக்கட்டளை அமைப்பின் 2019 ஆண்டிற்கான நினைவு விருது

பாலஸ்ரீ திருவாருர் டி. எஸ். ஸ்ரீராம் அறக்கட்டளை அமைப்பின் 2019 ஆண்டிற்கான நினைவு விருது...

தர்மசாஸ்தா சேவா சமிதியின் வெள்ளிவிழா

தர்மசாஸ்தா சேவா சமிதியின் வெள்ளிவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us