செய்திகள்

மும்பையில் இந்திய பேனா நண்பர்கள் பேரவையின் உறுப்பினர்கள் சந்திப்பு

பிப்ரவரி 21,2020 

 மும்பை : இந்தியப் பேனா நண்பர் பேரவை  மும்பை நிர்வாகிகள் மற்றும் மும்பை  உறுப்பினர்கள் சந்திப்பு 19.02.2020  புதன்கிழமை  மாலை  6.00 மணிக்கு  செம்பூர் ஸ்டார்வியூ மாடி வளாகத்தில்  பேரவைத் தலைவர் மா. கருண் தலைமையில்  நடைபெறற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கொழும்பு மாநகராட்சி மன்ற உறுப்பினர்  பாஸ்கரா சின்னத்தம்பி கலந்து கொண்டார்.  இலங்கையில் பேரவைக்கிளை அறிமுகவிழா நடத்துவது பற்றிய கலந்துரையாடல்  நடைபெற்றது.  பாஸ்கரா, அறிமுக விழாவுக்கான ஏற்பாடுகளை தாமே முன்னின்று நடத்துவதாக உறுதியளித்து, பேரவையின் 25 ஆண்டு சாதனைச் சரித்திரத்தையும் புகழ்ந்து உரையாற்றினார்.




பாஸ்கராவின் புதல்வி குமாரி கேதாரணி பாஸ்கரா தீட்டிய கண்கவர் வண்ண ஓவியங்களின் கண்காட்சியை பேரவை நண்பர்கள் கண்டு களித்துப் பாராட்டினர்.  தாம் வரைந்த புத்தர் ஓவியத்தை பேரவைத்தலைவர் மா.கருணுக்கு வழங்கினார். செயற்குழு உறுப்பினர் பா. மலர்விழி கேதாரணிக்குப் பொன்னாடை அணிவித்துப் பாராட்டினார். கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற நிர்வாகிகள் மற்றும் அமைப்பாளர்கள் கூட்டத்தில்  செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பா. மலர்விழிக்கு, சுலபா கருண் பயனாடை அணிவித்து  வாழ்த்து தெரிவித்தார். பேரவைப் பொருளாளர் கோ. செல்லத்தம்பி நன்றியுரையாற்ற, தேநீர் விருந்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. 




- தினமலர் வாசகர் ஜெ.ஜான் கென்னடி



Advertisement
மேலும் மும்பை செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

தலைநகரில் தைப்பூசத் திருவிழா

தலைநகரில் தைப்பூசத் திருவிழா...

தில்லி திகார் சிறை வளாகத்தில் திருவள்ளுவர் தினம்

தில்லி திகார் சிறை வளாகத்தில் திருவள்ளுவர் தினம்...

நொய்டா கோயிலில் தைப்பூசம்

நொய்டா கோயிலில் தைப்பூசம்...

ஸ்ரீ பரஞ்ஜோதி நகர் உலக சமாதான ஆலயத்தில் பொங்கல் விழா

ஸ்ரீ பரஞ்ஜோதி நகர் உலக சமாதான ஆலயத்தில் பொங்கல் விழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us