செய்திகள்

தலைநகரில் 9 ஆவது புரந்தரதாசர் தியாகராஜர் இசை விழா

மார்ச் 11,2020 

 புதுடில்லி: டில்லி ராமகிருஷ்ணாபுரம் தென் இந்திய சங்கமும் இந்திய சர்வதேச மையமும் இணைந்து 9 ஆவது புரந்தரதாசர் தியாகராஜர் இசை விழாவை 2 நாள் நடத்தின. லோதி எஸ்டேட் சர்வதேச அரங்கில் நடைபெற்ற முதல் நாள் நிகழ்ச்சியில், சென்னையைச் சேர்ந்த பவ்யா ஹரி பாடினார். இவர் இவருடைய தாயார் டி.வி.சுந்தரவள்ளியின் சிஷ்யை. தற்போது சங்கீத கலாநிதி டாக்டர் எஸ்.சவும்யாவிடம் கர்நாடக இசை கற்று வருகிறார். இந்த கச்சேரியில் ஜி.ராகவேந்திர பிரசாத்- வயலின், பி.மனோகர்- மிருதங்கம் வாசித்தனர்.  இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், டில்லி ஶ்ரீஹரி, ஶ்ரீராக் சகோதரர்கள் கச்சேரி நடைபெற்றது. இவர்கள் டாக்டர் பிரசாந்த் கோபிநாத் பாய் சிஷ்யர்கள். இந்த கச்சேரியில் உமா அருண்- வயலின், கும்பகோணம் டாக்டர் என்.பத்மநாபந் மிருதங்கம் வாசித்தனர்.டில்லி மற்றும் சுற்றுப்புற பகுதி இசை ஆர்வலர்கள் பெருமளவில் இந்த இரண்டு நாள் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். தென் இந்திய சங்கத் தலைவர் ஆர்.கே.வாசன் வரவேற்க, 2 நாள் நிகழ்வுகளைத்  துணைத் தலைவர் எஸ்.கிருஷ்ணசாமி தொகுத்து வழங்கினார்.   
- தினமலர் வாசகர் எஸ்.வெங்கடேஷ்Advertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

நொய்டாவில் இணையவழியில் நடந்த ஆவணி அவிட்டம்

நொய்டாவில் இணையவழியில் நடந்த ஆவணி அவிட்டம்...

மாநகராட்சி ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்கல் நிகழ்வு

மாநகராட்சி ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்கல் நிகழ்வு...

நொய்டா கோயிலில் முதல் 'அனுஷம்' நக்ஷத்திர பூஜை

நொய்டா கோயிலில் முதல் 'அனுஷம்' நக்ஷத்திர பூஜை...

மும்பையின் 'நாயக்” பொன். அன்பழகன்

மும்பையின் 'நாயக்” பொன். அன்பழகன் ...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us