செய்திகள்

ரமணாவின் பரத அரங்கேற்றம்

மார்ச் 15,2020 

தில்லி கர்நாடக சங்க வளாகத்தில்  ரமணாவின் பரத அரங்கேற்றம் நடைபெற்றது . ரமணா குரு கனகா சுதாகரின் மாணவர்.பொறியியல் பட்டதாரி,கணினி துறையில் முதுகலை பட்டம் பெற்று கார்பொரேடில் நல்ல பதவியில் இருந்து கொண்டே தனது கலை ஆர்வத்தை தன்னுள் போற்றி வளர்த்து மேடையில் அரங்கேற்றம் கண்டது மிகவும் பாராட்ட வேண்டிய ஒன்று.அன்றைய முக்கியவிருந்தினர்கள் குத்து விளக்கேற்ற அரங்கேற்றம் கணேச ஸ்துதி 'ஏக தந்தம் சூர்பகர்ணம் ' பாடலுடன் துவங்கியது. தொடர்ந்து ஆடல் அரசன் நடராஜனை சேக்கிழார் திருமுறை வரிகளில் ஹம்சத்வனியில் போற்றி கொண்டு தொடர்ந்தார்.  சங்கீர்ண ஜதியில் அலாரிப்புவை அழகாக நடமாடிக்கொண்டு தஞ்சாவூர் நால்வரின் ஜதீஸ்வரத்தை  ராக மாலிகா தாளமாலிகாவில் அற்புதமாக   மேடையில் வலம் வந்தார். அடுத்தாற்போல் நடனத்தின் அபிநயத்தை  பிரதானமாக வெளிப்படுத்தும் சப்தம்.இதில் மாறுதலாக துளசிதாஸரின் வரிகளை குரு கனகா சுதாகர்  வடிவமைக்க ராமரை கண்முன் கொண்டு நிறுத்தினார்.நடனத்தின் முக்கிய அங்கம் வர்ணம் .ஒரு கலைஞன் தேர்ந்த நடனத்தை அரங்கில் காண்பிக்க இது ஒரு தேர்வு போன்றது.மிக நீண்ட நேரம் ஆடக்கூடிய ஆட்டத்திற்கு உடல் வலிமை,மனத்திண்மை இரண்டும் வேண்டும்.பாபநாசம் சிவனின் வரிகளில் சிதம்பர நடராஜனின் தரிசனம் காண நம்மை நந்தனாருடன் அழைத்துச்சென்றார்.அபிநயமும் அற்புதம் ஆடலும் அற்புதம் . அடுத்து பாபநாசம் சிவனின் மயில் வாகனா  வள்ளி மன மோஹனா மயில் நடனம் ரசிக்கவைத்தது.ஜெயதேவரின் அஷ்டபதியில் ராதா கிருஷ்ணரின் ஊடல் நிறைந்த காதல் மிகு அபிநயங்கள் அவையோரை ரசிக்கவைத்தது சிந்து பைரவி தில்லானாவுடன் மங்களகரமாக தனது அரங்கேற்ற நிகழ்வை அரங்கம் மகிழ நிறைவேற்றினார்.


தலைநகர் காணாத இள வேனிற்கால மழையை  பொருட்படுத்தாது  அரங்கம் வந்த ரசிகர்கள் கரஒலி எழுப்பி தங்கள் மகிழ்வை தெரியப்படுத்தினார்கள் . அரங்கேற்றம் சிறக்க குருவின் நட்டுவாங்கம் ,வெங்கடேஸ்வரனின் வாய்ப்பட்டு ,தஞ்சாவூர் கேசவனின் மிருதங்கம்,செம்பை ஸ்ரீனிவாசனின் வயலின் பெரிதும் துணை நின்றன.


சிறப்பு விருந்தினர்கள் பிரபல நடன கலைஞர் டாக்டர் வாசுதேவன்  கர்நாடக சங்க தலைவர் டாக்டர் ஹெக்டே ,முத்தமிழ் பேரவை செயலர் டாக்டர் .முகுந்தன்  ஆகியோர் ரமணாவை வாழ்த்தி பேசினார்கள்.அவர்களையும் ,கலைஞர்களையும்  ரமணாவின் பெற்றோர் கௌரவப்படுத்தினர் .குரு கனகா சுதாகர் மாணவனின் அரங்கேற்ற சான்றிதழை அளித்து வாழ்த்தி பேசினார் .இந்த அரங்கேற்ற விழாவுக்கு உறுதுணையாய் பக்கபலமாய் இருந்த அனைத்து நல்நெஞ்சங்களுக்கும் நன்றி கூறினார் ரமணா .நிகழ்வுகளை மீனா வெங்கி தொகுத்து வழங்கினார்கள்.
- நமது செய்தியாளர் மீனா வெங்கி


Advertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

நொய்டாவில் இணையவழியில் நடந்த ஆவணி அவிட்டம்

நொய்டாவில் இணையவழியில் நடந்த ஆவணி அவிட்டம்...

மாநகராட்சி ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்கல் நிகழ்வு

மாநகராட்சி ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்கல் நிகழ்வு...

நொய்டா கோயிலில் முதல் 'அனுஷம்' நக்ஷத்திர பூஜை

நொய்டா கோயிலில் முதல் 'அனுஷம்' நக்ஷத்திர பூஜை...

மும்பையின் 'நாயக்” பொன். அன்பழகன்

மும்பையின் 'நாயக்” பொன். அன்பழகன் ...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us