செய்திகள்

ஸ்ரீ ராதா கிருஷ்ணா கல்யாண மஹோத்சவம்

மார்ச் 19,2020 

ஸ்ரீ ராதா கிருஷ்ணா கல்யாண மஹோத்சவம் 19 வருடமாக  ராம கிருஷ்ணாபுரம் சிவ சக்தி மந்திர் வளாகத்தில் மிக கோலாகலமாக நடைபெற்றது.  கணபதி பூஜையுடன் முதல் நாள்  நிகழ்வுகள் தொடங்கி ,வேத பாராயண கோஷத்துடன் ஷிவ் பரிவாரத்திற்கு அபிஷேகம் பெற்றது . தொடந்து தில்லி ப்ரஹ்மஸ்ரீ சுப்ராம பாகவதர் ஸ்ரீ சங்கர பாகவதர் குழுவினரின் அஷ்டபதி பஜனை நடைபெற்றது. மாலை 4 மணிக்கு கே ஆர் ஜெ பள்ளி மாணவர்களின் கர்நாடக  நிகழ்ச்சிகள் குரு நிர்மலா  பாஸ்கர் வழிகாட்டுதலில்  சிறப்பாக நடைபெற்றது., குரு  சீதா நாகஜோதியின் மாணவர்கள் பங்கேற்ற குச்சிப்புடி  நிகழ்ச்சிகள் பக்தர்களை கவர்ந்தன.பகவான் கிருஷ்ணரின் விக்கிரஹம் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ருந்தது .மாப்பிள்ளை  கோலத்தில் அவரை நாதஸ்வரம் முழங்க கோலாட்டம்  சீர்வரிசை ஜோடனைகளுடன் ஊர்வலமாய் மண்டபத்திற்குள் அன்பர்கள்  அழைத்து வந்தார்கள் .  மயூர் விஹார்  ருக்மணி மஹாலிங்கம் குழுவினரின் கோலாட்டம்  தொடந்தது .நாமசங்கீர்த்தனமும் டோலோட்சவமும் பாகவதர்கள் பாட அன்றைய நிகழ்ச்சிகள்   நிறைவுற்றது .


இரண்டாம்நாள் உஞ்சவர்த்தி , முத்து குத்தல்,ராதாகல்யாண வைபவம்  ஆஞ்சநேய உத்சவம் முறைப்படி செய்துவைக்கப்பட்டது . மஹாப்ரசாதத்திற்கு  பிறகு கோதாநாச்சியார் சத் சங்கத்தை  சேர்ந்த   கிருஷ்ணஸ்வாமி அவர்களின் ராதா  பற்றிய உபன்யாசம் நடைபெற்றது,கிருஷ்ணர் - ராதை இருவரின் தெய்வீக அன்பின் வெளிப்பாடு ,சுவையான  .பல புதிய செய்திகள்  கேட்க கிடைத்தது.மாலை ஆரத்தியுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன .விழா அமைப்பாளர்கள் சுந்தரம் அவர்கள் தலைமையில் மிக நேர்த்தியாக ஏற்பாடு செய்திருந்தனர்.தில்லி  வாழ் ஆன்மீக அன்பர்கள் பெருமளவில் கலந்துகொண்டு இறை பணியில் திளைத்தனர். 
- நமது செய்தியாளர் மீனா வெங்கி
Advertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

உலக நன்மைக்காக நொய்டாவில் தன்வந்திரி ஹோமம்

உலக நன்மைக்காக நொய்டாவில் தன்வந்திரி ஹோமம்...

கொரானா முதன்மை களப் பணியாளர்களுக்கு விருது வழங்கும் விழா

கொரானா முதன்மை களப் பணியாளர்களுக்கு விருது வழங்கும் விழா...

நொய்டாவில் நவராத்திரி மகோற்சவம்

நொய்டாவில் நவராத்திரி மகோற்சவம்...

அக்.,15, புனே தமிழ்ச்சங்கத்தில் அப்துல் கலாம் பிறந்தநாள் சிறப்பு நிகழ்வு

அக்.,15, புனே தமிழ்ச்சங்கத்தில் அப்துல் கலாம் பிறந்தநாள் சிறப்பு நிகழ்வு...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us